மலையாள நடிகருடன் திருமணமா?-கொஞ்சம் பொறுப்போடு நடந்துக்கோங்க; வெளுத்து வாங்கிய நித்யா மேனன்

மலையாள நடிகருடன் திருமணமா?-கொஞ்சம் பொறுப்போடு நடந்துக்கோங்க; வெளுத்து வாங்கிய நித்யா மேனன்
மலையாள நடிகருடன் திருமணமா?-கொஞ்சம் பொறுப்போடு நடந்துக்கோங்க; வெளுத்து வாங்கிய நித்யா மேனன்
Published on

மலையாள நடிகருடன், நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் என்ற செய்திகள் பரவியநிலையில், அதுகுறித்து மலையாள ஊடகம் ஒன்றின் மூலம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூருவில் பிறந்தவரான நித்யா மேனன், சிறுவயது முதல் நடித்து வருகிறார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு ‘வெப்பம்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘காஞ்சனா 2’, ‘ஓ காதல் கண்மணி’, ‘24’, ‘மெர்சல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நித்யா மேனனுக்கு, மலையாள நடிகருடன் விரைவில் திருமணம் என கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

இந்நிலையில், மனோரமா ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளில் முற்றிலும் உண்மை இல்லை. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன், உண்மையைச் சரிபார்க்க ஊடகங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது வேலையில் மட்டுமே தற்போது நான் முழுக் கவனம் செலுத்தி வருகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை நித்யா மேனன், தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில், 3 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதேபோல், விஜய் சேதுபதி மலையாளத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் 19(1)(a) படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com