கனடா பட விழாவில் திரையிடப்படும் 'நிலநடுக்கம்'

கனடா பட விழாவில் திரையிடப்படும் 'நிலநடுக்கம்'
கனடா பட விழாவில் திரையிடப்படும் 'நிலநடுக்கம்'
Published on

சுயாதீன தமிழ்ப் படமான நிலநடுக்கம், கனடாவின் 49 வது மாண்ட்ரியல் பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது கனடாவின் மிகப் பழைமையான படவிழாவாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தை பாலாஜி வேம்பு செல்லி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.

இதே படவிழாவில் கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு படம் திரையிடப்பட்டது. எழுபது நிமிடங்கள் ஓடக்கூடிய நிலநடுக்கம் ஒரு பரிசோதனை சினிமா. கொடைக்கானலில் இருந்து 35 - 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கக்கல் என்ற கிராமத்தைச் சுற்றி நடக்கும் ஆபத்தும் மர்மமும் நிறைந்த படமாக உருவாகியுள்ளது.

ஒரு புகைப்பட இதழியலாளரைப் பற்றிப் பேசுகிறது நிலநடுக்கம். அந்த கதாபாத்திரத்தில் மனுசங்கடா படத்தில் நடித்த ராஜிவ் ஆனந்த் நடித்துள்ளார். சில நவீன நாடகக் கலைஞர்களும், உள்ளூர்க்காரர்களும்கூட நடித்துள்ளார்கள்.

மாண்ட்ரியல் பட விழா அக்டோபர் 7 முதல் 18 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. படம் திரையிடப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. போட்டிக்கான பிரிவில் நிலநடுக்கம் படம் திரையிடப்படவுள்ளது. அதற்கு ரசிகர்களின் விருது கிடைக்கும் வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com