இன்று திரையங்க உரிமையாளர்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தமிழக தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர் சங்கத்திற்கு புதிய நிபந்தனைகளை விதித்து கடிதம் எழுதியுள்ளனர்.
திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில் திரையரங்கத்தின் க்யூப், விஎப்ஓ உள்ளிட்ட கட்டணங்களை தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டார்கள், ஆன்லைன் புக்கிங் டிக்கெட்டில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தர வேண்டும், திரையரங்கில் ஒளிபரப்பப்படும் விளம்பரத்தில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதனை கடுமையாக எதிர்த்த திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் இப்படியே போனால் தமிழகத்தில் திரையரங்குகள் குறைந்து விடும் என்றும் தியேட்டர்களினால் தான் இன்றைய கதாநாயகர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என புதியதலைமுறைக்கு பேட்டி அளித்தார்.