விஜய் நடித்துள்ள மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரிய அனுமதி கிடைக்காததால் படம் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்தினால் விலங்குநல வாரியத்தின் அனுமதி பெறவேண்டும். படத்தில் புறாக்கள் பறப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் கிராபிக்ஸ்தான் என்பதற்கான ஆதாரங்களை அளிக்கவில்லை எனவும் திரைப்படத்தில் இடம் பெறும் பாம்பின் பெயர் ராஜநாகம் என்பதற்குப் பதிலாக நாகப்பாம்பு என்று மாற்றி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி கிடைக்கவில்லை.
மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்று விதிக்கப்பட்ட தடையை கடந்த 6-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நீக்கிய நிலையில், தற்போது அந்தப் படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.