மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் நடிகர் அஜித்... அறிமுகமானது ‘Ajithkumar Racing’ அணியின் லோகோ!

துபாயில் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற உள்ள GT3 ரேஸில் நடிகர் அஜித்குமார் அறிமுகமாகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ இன்று வெளியானது.
நடிகர் அஜித் ரேசிங்
நடிகர் அஜித் ரேசிங்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: சந்தான குமார்

நடிகர் அஜித்குமார், தனது சிறு வயது முதலே கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். இடையே உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரேஸிங்கில் ஈடுபடாமல் இருந்து வந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ் களத்திற்கு திரும்பியுள்ளார். இதற்காக ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற ஒரு அணியை உருவாக்கியுள்ளார் அவர்.

Actor Ajith Kumar
Actor Ajith Kumarpt desk

PORSCHE 992 GT 3 பிரிவிலான ரேஸ் போட்டியில் இந்த அணி பங்கேற்க உள்ளது. நடிகர் அஜித்குமார் தலைமையிலான அணியில் Fabian duffeiux, mathew deutry, Cam McLeod என மூன்று ஓட்டுனர்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நடிகர் அஜித் ரேசிங்
மாநாடு நடைபெறும் திடல்: ‘தவெக நிர்வாகிகள் உட்பட யாருக்கும் 26ம் தேதி வரை அனுமதி இல்லை’!

இந்த அணிக்கான கார்களை தயார் செய்வது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள BAS KOTEAN RACING என்ற மிகவும் பிரபலமான ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.

PORSCHE 992 GT 3 பிரிவிலான ரேஸ் முதல் சுற்று துபாயில் ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் நடிகர் அஜித் ஓட்டுநராக அறிமுகமாக உள்ளார். அதன் பின் ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் 5 ரேஸ் போட்டிகளில் அஜித்குமார் அணி பங்கேற்க உள்ளது.

நடிகர் அஜித் ரேசிங்
“விஜய் வந்த பிறகுதான் அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும்” - கௌதமி

இந்நிலையில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ இன்று வெளியானது. அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com