'நாளை உண்மையிலேயே பிரச்னை என்றால்..?'- கே.எஸ்.ரவிக்குமார் உத்திக்கு நெட்டிசன்கள் விமர்சனம்

'நாளை உண்மையிலேயே பிரச்னை என்றால்..?'- கே.எஸ்.ரவிக்குமார் உத்திக்கு நெட்டிசன்கள் விமர்சனம்
'நாளை உண்மையிலேயே பிரச்னை என்றால்..?'- கே.எஸ்.ரவிக்குமார் உத்திக்கு நெட்டிசன்கள் விமர்சனம்
Published on

சமூக வலைதளத்தில் இரண்டு நாள்களுக்கு பிறகு, தான் போட்ட புதிர் ஒன்று விடைக் கூறி இருக்கிறார் தமிழ் சினிமா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். தான் நடிக்கும் படத்தின் ப்ரோமோஷனுக்காக பின்பற்றிய அவரது உத்தியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும், குணசித்திர நடிகராகவும் கவனம் ஈர்த்து வருபவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் கடந்த இரண்டு தினங்களாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு வருகிறார். ``உங்கள போல நானும் சராசரி இந்திய குடிமகன்தான். எல்லாருக்கும் இருக்க மாதிரி சொந்தமா வீடு கட்டணும்னு ஆசை, கனவு இருக்கும். எனக்கும் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு இருந்தது. எல்லோருக்கும் இருக்கும் கனவுதான் அது. அதன்படி அழகான வீடு கட்டினேன்.

அதுல சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தா ஒரு பிரச்னை. நம்ம என்ன கோழையா, எப்படி சைலன்டா இருக்க முடியும். எதிர்த்து கேள்வி கேட்டேன். பிரச்னை பெருசாகிருச்சு. என்ன பண்றதுன்னு புரியல. அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன்.

நான் ஒரு சொந்த வீடு கட்டுனா, அதை சுற்றி மதில் சுவர் கட்டுவோம் இல்லையா... அப்படி கட்டுன எனக்கு சொந்தமான அந்த மதில் சுவருல என்னை கேக்காம இந்த கட்சிக்காரங்க எல்லாம் வந்து ஆக்கிரமிப்பு செஞ்சா, அது எந்த விதத்துல நியாயம். `என் சுவர் என் உரிமை' என நான் தட்டிக்கேட்க போக பிரச்னையே ஆரம்பிச்சது. என்ன பிரச்னை, இவ்வளவு பிரசனையா மாறியது.. அந்த பிரச்சனையை எப்படி தீர்த்தோம் என்பதை சீக்கிரமே நான் உங்களுக்கு சொல்கிறேன். காண்பிக்கிறேன்" என்று கூறி இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fiamksravikumar%2Fvideos%2F445535576664291%2F&show_text=false&width=375" width="375" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

அதன்படி அவர் இன்று வெளியிட்ட வீடியோவில், ``இரண்டு நாள்களாக நான் பதிவிட்ட வீடியோ மூலமாக எனக்கு ஆறுதல் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக மிக நன்றி. அந்த இரண்டு நாளும் நான் கே.எஸ்.ரவிகுமாராக பேசவில்லை. நான் நடிக்கிற ஒரு படத்தில் வரும் கேரக்டராகவே பேசினேன். இதை ஏன் முதல் நாளே சொல்லவில்லை என நீங்கள் கேட்பது எனக்கு தெரியும். மன்னித்துவிடுங்கள், அதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

இந்தப் படத்தில் வருகிற கேரக்டருக்கு மட்டும் அந்தப் பிரச்னை இல்லை. இன்றைக்கு, அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் நிறைய பேருக்கு இது மாதிரியான பிரச்னைகள் இருக்கும். இந்தப் பிரச்சனையை அந்தக் கேரக்டர் எப்படி தீர்த்தான் என்பதை படம் பார்த்தால் உங்களுக்கு தெரியும்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fiamksravikumar%2Fvideos%2F147271170632581%2F&show_text=false&width=261" width="261" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

முதல்நாள் கே.எஸ்.ரவிக்குமார் வீடியோ பதிவிடும்போதே சிலர், இவர் படத்தின் விளம்பரத்திற்காக பேசுகிறார் என்று கணித்திருந்தாலும், சிலர் அவருக்கு உண்மையிலேயே பிரச்னை இருக்கிறது என்று நினைத்து அவருக்கு ஆதரவாக பேசிவந்தனர்.

ஆனால், இன்றைக்கு படத்தின் புரொமோஷனுக்காகத்தான் இப்படி பேசியிருக்கிறார் என்பது தெளிவானதும் ரவிக்குமார் மீது சில நெட்டிசன்கள் வருத்தத்தையும் அதிருப்தியையும் பகிர்ந்துகொண்டனர். ரவிக்குமாரை ஃபாலோ செய்யும் ரசிகர் ஒருவர், ``இருந்தாலும் நாளைக்கு உண்மையிலேயே ஏதாவது பிரச்னை என்றால், இதுபோல தெரிந்தவர்களும், தெரியாதவர்களும், உங்கள் மேல் அன்பு உள்ளவர்களும், மரியாதை உள்ளவர்களும் எங்கனம் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். எல்லாவற்றையுமே வியாபாரமாக பார்க்க கூடாது, சில நேரங்களில் உறவுகள் மட்டுமல்ல, நண்பர்கள் மட்டுமல்ல முகம் அறியாதவர்கள் கூட நமக்கு உதவும் சூழ்நிலை வரலாம், ஆகவே விளம்பர யுக்தியை தனது தனிப்பட்ட பிரச்சனை போல் சித்தரித்து கடைசியில் இதுபோல் ஒன்றுமில்லை என்பதுபோல் மாயை உருவாக்குவது உங்களுக்குத்தான் மிகவும் பின்னடைவையும் நல்ல ஆதரவையும் கெடுக்கும்.

மேலும், இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களில் நான் அறிந்தவரையில் உங்களிடம் ஆதாயம் எதிர்பார்த்து யாரும் பின்னூட்டம் இடவில்லை, நல்ல இயக்குநர், நல்ல படைப்பாளி, மூத்த கலைஞன் ஆக அவருக்கு ஏதோ ஒரு பிரச்னை, அதற்காக நாம் குரல் கொடுப்போம் துணை நிற்போம் என்றுதான் பின்னூட்டம் அளித்தார்கள். ஆகவே நல்ல மனங்களை வெல்வது மிகக் கடினம், வென்ற மனங்களை தக்க வைத்துக் கொள்வது அதைவிட மிகக் கடினம். நன்றி உங்கள் ரசிகன் ஒருவன்" என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இதேபோல், இன்னொரு ரசிகர் ஒருவர், ``சினிமா பிரபலங்கள் நமது குடும்பத்தில் ஒருவர் மாதிரி... சின்ன நடிகர் முதல் பெரிய ஜாம்பவான் வரை (எல்லா துறைகளையும் சேர்த்து, அதாவது திரைக்கு முன், பின் எல்லாம் சேர்த்து) எல்லோரையும் கொண்டாடுவோம். ஆனால் அவர்களுக்கு ஒரு சில ரசிகர்களைத் தவிர அனைவருமே, யாரோ மாதிரிதான். உதாரணமாக மூன்றாம் பிறை படத்தில் கமல் கதிதான் நமக்கு. போகட்டும் விட்டு விடுங்கள். நாம் நாமாக இருப்போம். நன்றிங்க... இதுவும் ஒரு விளம்பர யுக்திதான் போல" என்று கூறியிருக்கிறார். ஒரு சிலர் ரவிக்குமாரின் யுக்திக்கு பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com