‘நம்ம பார்ட்டி ஓயாது’ - The GOAT OTT ரிலீஸ் தேதியை அறிவித்தது Netflix..!

விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
vijay
vijaypt web
Published on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் The G.O.A.T- The Greatest Of All Time. இப்படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

The GOAT Vijay
The GOAT VijayPT Web

கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கலவையான விமர்சனங்கள் இருந்தபோதும் பாக்ஸ் ஆஃபீசில் சக்கைப்போடு போட்டது கோட்.

vijay
ஓசூர்: கர்நாடக எல்லையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர் குடும்பத்துடன் கைது

sacnilk தரவுகளின்படி, கோட் திரைப்படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்த நிலையில், லியோ திரைப்படத்தின் தமிழ்நாட்டு வசூலை முந்தியுள்ளது. லியோ தமிழ்நாட்டில் 215 கோடிகளை வசூலித்த நிலையில், கோட் அதை முறியடித்து தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. சில தினங்களுக்கு முன்பே பொன்னியின் செல்வன் வசூலையும் முறியடித்திருந்தது. படம் வெளியாகி நான்காவது வாரத்தில் உலகம் முழுவதிலும் 448 கோடிரூபாயை வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் தோராயமாக 292.25 கோடிகளை வசூலித்துள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 3 ஆம் தேதி The GOAT திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay
"இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு.." - மெய்யழகன் படத்தில் சில நிமிடங்களில் குறைப்பு

முன்னதாக, GOAT திரைப்படத்தில் திரையரங்க பதிப்பிற்காக நீக்கப்பட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டு ஓடிடியில் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

vijay
உடல்நிலை சீரானதை அடுத்து, தனி அறைக்கு மாற்றப்பட்டார் ரஜினிகாந்த்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com