நடிப்புக்கு இடைவெளி விட்டாலும் சினிமாவில்தான் இருக்கிறேன் - நஸ்ரியா

நடிப்புக்கு இடைவெளி விட்டாலும் சினிமாவில்தான் இருக்கிறேன் - நஸ்ரியா
நடிப்புக்கு இடைவெளி விட்டாலும் சினிமாவில்தான் இருக்கிறேன் - நஸ்ரியா
Published on

தமிழில் ‘நேரம்’, ‘ராஜாராணி’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையே பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நஸ்ரியா. மலையாளத்தில் இவர் நடித்த ‘ஓம் சாந்தி ஒசானா’, ‘பெங்களூரு டேஸ்’ போன்ற மலையாள படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. திடீரென படத்திற்கு முழுக்கு போட்ட நஸ்ரியா நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

பஹத்தை திருமணம் செய்துகொண்ட பின்னர் நடிப்புக்கு இடைவெளி விட்ட நஸ்ரியா, ‘கூடே’ திரைப்படத்தில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் நஸ்ரியா திரையில் தோன்றிய திரைப்படமாக ‘ட்ரான்ஸ்’ அமைந்தது. இந்நிலையில் திரைத்துறை குறித்தும் சொந்த வாழ்க்கை குறித்தும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு நஸ்ரியா பேசியுள்ளார், அதில்

சொந்த வாழ்க்கையிலும் திரைத்துறையிலும் உங்கள் கணவர் பஹத் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறார்?

ஒரு நடிகராக அவர் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் அவர் எடுக்கும் கடின உழைப்பும், அவரது ஈடுபாடும் என்னை ஊக்கப்படுத்தும். அவர் எப்போதும் உறுதுணையாக இருக்கிறார். நான் படம் நடிப்பது குறித்தெல்லாம் அவர் என்னிடம் ஆலோசித்தது இல்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பிற்கு இடைவெளி விட்டபோது அவர் என்னை 'கதைகளை கேள்' எனச் சொன்னார்.

சிறந்த கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறீர்களா?

நான் கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறேன். ஆனால் என்னப் படத்தில் நடிக்க வேண்டும். எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்.

படம் நடிக்காத நேரங்களில் நஸ்ரியா என்னதான் செய்துகொண்டிருக்கிறார்?

நான் வீட்டில்தான் இருக்கிறேன், தேவைப்பட்டால் பயணம் செய்கிறேன். ஆனாலும் நான் படங்களை தயாரிக்கிறேன் அதற்காக கதைகளை கேட்கிறேன். நடிக்கவில்லை என்றாலும் நான் சினிமாவிலேயே தான் இருக்கிறேன்” என நஸ்ரியா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com