சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ’மாம்’ படத்தில் நடித்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. பிரபல இயக்குனர் சேகர் கபூர் தலைமையிலான குழு இந்த 65-வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வு செய்துள்ளது. விருதுகளை அறிவிக்கும் போது, ‘பிராந்திய மொழி திரைப்படங்கள் தரத்தில் ஆச்சரியப்பட வைக்கின்றன’ என்று சேகர் கபூர் தெரிவித்தார்.
விருது விவரம் வருமாறு:
சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது ’டு லெட்’க்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருந்தார். சிறந்த நடிகைக்கான விருது, டேக் ஆஃப் (மலையாளம்) படத்தில் நடித்த பார்வதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு (காற்று வெளியிடை)
அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசை (மாம்)க்கான விருதுக்கும் அவர் தேர்வாகியுள்ளார்.
மற்ற விருது விவரம்:
சிறந்த படம்: வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (அசாம் மொழி படம்)
சிறந்த நடிகர் : ரித்தி சென் (நாகர்கிர்டன் - பெங்காலி படம்)
துணை நடிகை: திவ்யா தத்தா (இரடா).
சிறந்த பாடகி: சாஷா திரிபாதி (வான் வருவான், காற்றுவெளியிடை),
பாடகர்: கே.ஜே.யேசுதாஸ் (மலையாளம் படம்).
சிறந்த துணை நடிகர்: பஹத் பாசில்.
சிறந்த மலையாள படம்: தொண்டிமுதலும் திர்க்சாக்ஷியும்.
இந்திபடம்: நியூட்டன்
கன்னட படம் : ஹெப்பட்டு ராமக்கா.
தெலுங்கு படம்: காஸி
மராட்டி படம்: கச்சா லிம்பு
நடன இயக்குனர்: கணேஷ் ஆச்சார்யா (படம்- டாய்லட்)
சண்டை இயக்குனர் : பாகுபலி-2
ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : பாகுபலி -2
பிரபலமான படம்: பாகுபலி-2
தாதா சாகேப் பால்கே விருது: வினோத் கண்ணா