ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நெப்போலியன்!

ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நெப்போலியன்!
ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நெப்போலியன்!
Published on

நடிகர் நெப்போலியன் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

கைபா பிலிம்ஸ் சார்பில் அமெரிக்க தொழிலதிபர் டெல் கணேசன் தயாரிக்கும் ஹாலிவுட் படம், ’டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’.  இந்தப்படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார் நெப்போலியன். இதில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

குற்றப்பின்னணியுடைய இக்கதைக்கு தனித்துவமான அமானுஷ்யங்கள், திகில் சேர்க்கிறது.  இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பின்னணி பாடகரும் நடிகருமான தேவன் ஏகாம்பரம் இசை அமைக்கிறார்.

ஜெஸி ஜென்சென் , அயல்நாட்டு இராணுவப்பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான லேக் ஓரியன் பகுதிக்கு திரும்புகிறார்.  அமைதியான அந்த பகுதியில் நடைபெறும் தொடர் கொலைகளும், விவரிக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகளும் அவரை பாதிக்கிறது. இந்த அசாதாரண நிகழ்வுகளுக்கு காரணம் நைன் ரூஜ் என்ற  அமானுஷ்ய சக்தி என்றும் இந்த நிகழ்வுகள் அதன் மறுபிறப்பைச் சுட்டிக்காட்டுவதாகவும் உணர்கிறார் விசாரணை அதிகாரி ஃபின்னிக். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com