புஷ்பா ஃபகத் ஃபாசிலை தூக்கி சாப்பிடும் SJ சூர்யா! - நானியின் SURYA'S SATURDAY பட ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் நானி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடியான நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ திரப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது.
சூர்யாஸ் சாட்டர்டே
சூர்யாஸ் சாட்டர்டேPT
Published on

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் நானி. அவரின் சமீபத்திய 'ஹாய் நான்னா' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து நானியின் 31வது திரைப்படமாக உருவாகியிருப்பது “சூர்யாஸ் சாட்டர்டே (SURYA'S SATURDAY)” திரைப்படம். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் தயாரித்திருக்கும் படத்திற்கு, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு விநியோகத்தை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது.

SJ Suryah
SJ Suryah

ஃபுல் அண்ட் ஃபுல் ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய அசுரத்தனமான நடிப்பின் மூலம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சூர்யாஸ் சாட்டர்டே
’மருதமலை மாமணியே முருகையா..’! ஆக்சன், காமெடி, எமோசன் என ஃபுல்-பேக்கேஜாக கலக்கும் GOAT ட்ரெய்லர்!

ட்ரெய்லர் எப்படி இருக்கிறது?

ஒரு பக்கம் கொஞ்சம் கூட இரக்கமில்லாத போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாவாக வரும் எஸ்.ஜே. சூர்யா, “டாய்லட் எங்க இருக்குனு என்கிட்ட கேட்குறான்” என அற்ப காரணங்களுக்காக கூட மற்றவர்களை கொடூரமாக தாக்கும் மொரட்டு வில்லனாக இருக்கிறார்.

SJ Suryah
SJ Suryah

மறுபக்கம் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நானி, ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து பையன், ஒரு கட்டத்தில் அநீதியைத் தாங்க முடியாத நானி. பயத்தை ஓரங்கட்டிவிட்டு ஒருஅடி முன்னே செல்கிறார். சனிக்கிழமை அன்று முகத்தில் துணியை கட்டிக்கொண்டு அநீதிசெய்யும் நபர்களை சென்று அடித்துவிட்டு வருகிறார்.

actor nani
actor nani

இரண்டு எதிரெதிர் பக்கமாக நிற்கும் இன்ஸ்பெக்டர் தயா மற்றும் சூர்யா இருவருக்குள்ளும் எப்படி மோதல் வெடிக்கிறது. சூர்யாவை இன்ஸ்பெக்டர் தயா கண்டுபிடித்தாரா? அதற்குபிறகு என்ன நடக்கிறது? என்பதே படத்தின் கதையாக இருக்கிறது.

எஸ்.ஜே, சூர்யா தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் திரைமுழுவதும் ஆக்கிரமிக்கிறார், நானி அவருக்கு சரிசமமான நடிப்பை வெளிப்படுத்தி ஆக்சன்களில் மிரட்டுகிறார். இந்த இரண்டுபேரும் திரையில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சி திரையில் பட்டாசாக நிச்சயம் வெடிக்கப்போகிறது. இப்படித்தின் தமிழ் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் அதிகப்படியான வரவேற்பை கொடுத்துவருகின்றனர்.

சூர்யாஸ் சாட்டர்டே
‘ரஹ்மானுக்கு விருது கொடுக்காதது அவமானம்’-9 விருதுகளை அள்ளியும் ஆடுஜீவிதம் இயக்குநர் கடும் அதிருப்தி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com