சோனாலியை தொடர்ந்து இந்தி நடிகை நபீஸா அலிக்கும் புற்றுநோய்!

சோனாலியை தொடர்ந்து இந்தி நடிகை நபீஸா அலிக்கும் புற்றுநோய்!
சோனாலியை தொடர்ந்து இந்தி நடிகை நபீஸா அலிக்கும் புற்றுநோய்!
Published on

மூன்றாம் கட்ட புற்றுநோயில் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்றுவருதாகவும் இந்தி நடிகை நபீஸா அலி தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை மணிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். அவரை அடுத்து, நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இந்தி நடிகர் இர்பான் கானுக்கும் புற்று நோய் பாதிப்பு இருப்பதை அடுத்து அவரும் அதற்காக சிகிச்சை பெற்று வருகி றார்.

இந்தி சினிமா பிரபலங்கள் இப்படி புற்றுநோயில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தானும் பாதிக்கப்பட்டிருப்பதாக, பிரபல இந்தி நடிகை நபீஸா அலி தெரிவித்துள்ளார்.

இந்தியில், ஜூனூன், மேஜர் சாப், பிக் பி, யம்லா பக்லா தீவானா உட்பட பல படங்களில் நடித்தவர் நபீஸா அலி. சசி கபூர், அமிதாப்பச்சன், தர்மேந்திரா உட்பட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். சமூக செயற்பாட்டாளரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான இவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

(மகன், மகள்களுடன் நபீஸா அலி)

அவரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நபீஸா அலி, ’எனது குடும்பம்தான் என் பலம்’ என்றும் தெரிவித்துள்ளார். 

61 வயது நபீஸாவின் கணவர் பிரபல போலோ விளையாட்டு வீரர், ஆர்.எஸ்.சோதி. இவர்களுக்கு அஜீத் சோதி என்ற மகனும் அர்மனா, பியா என்ற மகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com