நாடு முழுக்க அரசியல் களங்களில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்க, அப்படியான அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் 'நான் ஆணையிட்டால்' ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பொதுவாக அரசியல் திரைப்படங்கள் என்றாலே, சில விசயங்களை மறைமுகமாக சொல்லும் உத்தியே சினிமாக்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிலிருந்து முற்றிலும் மாறி, நான் ஆணையிட்டால் திரைப்படம் சமகால அரசியல் நிகழ்வுகளை துணிச்சலாக பதிவு செய்துள்ளது. அது அவசியமானது என்கிறார் இப்படத்தின் இயக்குநர் தேஜா. பாகுபலி 2-ற்குப் பிறகு ராணா, 'நான் ஆணையிட்டால்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல்வாதியாக அவர் நடித்துள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், கேத்ரின் தெரஸா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நேர்மையான இளைஞன் ஒருவனை, அரசியல் எப்படி மாற்றுகிறது எனும் கதையே 'நான் ஆணையிட்டால்' என ராணா சொல்கிறார்.
இந்தியா முழுக்க அரசியலில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகளை நான் ஆணையிட்டால் திரைப்படத்தில் நுணுக்கமாக பதிவு செய்துள்ள இயக்குநர், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் இப்படம் இருக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.