'என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு' - யுவன்சங்கர் ராஜா

'என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு' - யுவன்சங்கர் ராஜா
'என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு' - யுவன்சங்கர் ராஜா
Published on

'என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு' என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற தன்னுடைய 25 வருட இசைப்பயணம் குறித்த நிகழ்ச்சியில் யுவன் பேசுகையில், ''25 வருடம் எப்படி வேகமாக சென்றது எனக்கு தெரியவில்லை. நா.முத்துகுமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடன் எராளமான பாடல்கள் வேலை செய்துள்ளோம். நாங்கள் பணியாற்றிய பெரும்பாலான பாடல்கள் வெற்றியடைந்துள்ளன. நான் பயணங்களின் போது அப்பா பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பேன். என் மனைவி 'போதும் பாட்டை மாத்துங்க'ன்னு சொல்ற அளவுக்குப் கேட்பேன்.

விஜய் சாருடன் இருக்கும் ஜெகதீஷ், "விஜய் சார் மகன் 'யுவனிசம்' என்ற டிசர்ட் போட்டுக்கொண்டு இருக்கும் போட்டோவை எனக்கு அனுப்பினார். பிறகு நான் விஜய் சாரை பார்க்கச் சென்றபோது, "நான் தான் உங்களுக்கு போட்டோவை ஜெகதீஷிடம் அனுப்பச் சொன்னேன். என் பையன் உங்களோட வெறித்தனமான ஃபேன்" என்றார் விஜய் சார்.

எனக்கு இந்தி தெரியாது. அவர்களைப் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த டிசர்ட்டை போடவில்லை. எனக்கு இந்தி தெரியாது. "எனக்கு இசையில்தான் ஆர்வம். நடிப்பில் ஆர்வம் இல்லை. அப்பாவிடம் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றதற்கு 'ஓ அப்படியா' என்றார். இந்தத் தருணத்தில் என் அம்மாவை மிஸ் பண்றேன். என் நினைவில் என்றும் இருப்பார். அம்மா இல்லாததை என் மனைவியும் மகளும் நிறைவு செய்கிறார்கள்.

"படம் இயக்க கதை எழுதி வைத்துள்ளேன். இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் கண்டிப்பாக இயக்குவேன். ஆனால், அது நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டக் கதை '' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com