ஆர்மேனியக்கட்டை டூ ஒண்டிக்கட்ட: இயக்குநரான இசையமைப்பாளர்

ஆர்மேனியக்கட்டை டூ ஒண்டிக்கட்ட: இயக்குநரான இசையமைப்பாளர்
ஆர்மேனியக்கட்டை டூ ஒண்டிக்கட்ட: இயக்குநரான இசையமைப்பாளர்
Published on

ஆர்மேனியக்கட்டையில் இருந்து ’ஒண்டிக்கட்ட’ படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார் இசையமைப்பாளர் பரணி.

பெரியண்ணா படத்தில் இசையமைப்பளாரக அறிமுகமான பரணி, பார்வை ஒன்றே போதுமே, சுந்தரா டிராவல்ஸ், சார்லி சாப்ளின் என 40 படங்களுக்கு மேல்

இசையமைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார்.’நல்ல கதை அமைந்ததால்‘ஒண்டிக்கட்ட’படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும்

வலிக்கும்போதோ, அல்லது ஏதோ ஒரு வகையிலோ ஒண்டிக்கட்ட தான். படத்தில் நாயகன் ஒண்டிக்கடயாகவே வழ்ந்து முடிக்கும் கதை என்பதால் ஒண்டிக்கட்ட என

டைட்டில் வைத்தோம். பல படங்களுக்கு இசையமைத்த அனுபவம் இருந்தாலும் எனது இயக்கத்தில் முதல் படம் இது. என்ன தான் விஷயங்கள் தெரிந்திருந்தாலும் பயம்

இல்லாமல் படம் எடுக்க முடியாது. மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்கிற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும் நானும் மக்களில் ஒருவன் தானே. அதனால்

அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் உணர்வுப்பூர்வமான ஒரு படத்தை எடுத்திருக்கிறேன்’என்கிறார் பரணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com