ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்த ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக கற்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் புகார் தெரிவித்துள்ளார்.
விக்ரம் வேதா, கைதி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் சாம்.சி.எஸ். இவர், கேரளாவில் உள்ள தன்னுடைய சகோதரரின் பிறந்த நாளுக்கு பரிசளிக்கும் விதமாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், வாட்சுக்கு பதிலாக கற்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என சாம்.சி.எஸ் புகைப்படங்களுடன் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பே ஆன்லைன் நிறுவனங்கள் மீது இது போன்ற பல குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், தற்போது பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் புகைப்படத்துடன் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் செயலை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டுள்ளது.