Insidious The Red Door
Insidious The Red DoorInsidious The Red Door

Insidious The Red Door | கதவைத் திற பேய் வரட்டும்..!

இந்த காலத்தில் ஒரு ஹாரர் படம் எடுப்பது மிகக் கடினமான விஷயம். சின்னதாக வேலைக்காகவில்லை என்றாலும் ஹாரர் காட்சி காமெடி காட்சியாகிவிடும்.
Published on
Insidious The Red Door(2 / 5)

அதே ஈவில் ஸ்ப்ரிட், அதே குடும்பம், அதே Astral Projection அதே டெய்லர் அதே வாடகை தான் Insidious The Red Door.

Insidiousன் முதல் இரண்டு பாகங்களை ஜேம்ஸ் வான் இயக்கியிருப்பார். அடுத்தடுத்த பாகங்களை வேறு இயக்குநர்கள் இயக்கினார்கள். இது மட்டுமல்ல Saw, The Conjuring போன்றவற்றையும் துவங்கியது ஜேம்ஸ் வான் தான். பிறகு அந்த படங்களின் அடுத்த பாகங்கள் வேறு கைகளில் சிக்கி சீரழியும். அதன் படி இந்த Insidious The Red Door படத்தை இயக்கியிருப்பது, Insidiousன் ஐந்து பாகங்களிலும் முதன்மைக் கதாபாத்திரம் Josh Lambertடாக நடித்த Patrick Wilson. இதற்கு முன்பு இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை பார்க்காதவர்களுக்கு படம் பற்றிய குட்டி ஸ்டோரி இதோ,

Josh Lambert - Renai Lambert தம்பதியினர் ஒரு சந்தோஷமான குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மூத்த மகன் Dalton Lambertக்கு ஈவில் ஸ்ப்ரிட்டால் பாதிப்பு ஏற்பட அதனால் கோமாவுக்கு செல்கிறார். இதிலிருந்து எப்படி அந்தக் குடும்பம் மீண்டது என்பதுதான் ஜேம்ஸ் வான் இயக்கியிருந்த முதல் இரு பாகங்களின் கதை. Insidious 2வின் சீக்குவலாக வந்திருப்பதுதான் Insidious The Red Door. Insidious 2 கதை முடிவில் இந்த சம்பவங்களை எல்லாம் நாங்கள் மறந்துவிட வேண்டும் என சொல்லி ஹிப்னோட்டைஸ் மூலம் மோசமான இந்த நினைவுகளை அழிக்க சொல்கிறார் Josh Lambert. எனவே Josh மற்றும் Daltonக்கு நினைவுகள் அழிக்கப்படுகிறது.

Insidious The Red Door
Insidious The Red DoorInsidious The Red Door

இதற்குப் பின் பத்தாண்டுகள் கழித்து தொடங்குகிறது Insidious The Red Doorன் கதை. Josh Lambert (Patrick Wilson) மனைவி Renai Lambert (Rose Byrne)யிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்கிறார். குழந்தைகள் மனைவி Renaiயிடம் வளர்கிறார்கள். இந்த நிலையில் மூத்த மகன் Dalton Lambert (Ty Simpkins) ஹைஸ்கூலில் ஓவியம் பயில சேர்கிறார். அங்கு அவருக்கு சில அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. ஒரு கட்டத்தில் Josh மற்றும் Dalton இருவருக்கும் பத்து வருடத்திற்கு முன்பு நடந்த விஷயங்கள் மெல்ல மெல்ல நினைவுக்கு வருகிறது. அந்த ஈவில் ஸ்பிரிட்டால் பாதிப்புகளும் ஏற்படத்துவங்குகிறது. இதன் பின் என்ன ஆகிறது? இருவரும் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.

படத்தின் பாசிடிவாக சொல்வதென்றால் இது ஒரு சீரியஸான படம் என்றாலும், இடையிடையே வரும் ஹூமர் போர்ஷன்ஸ் நன்றாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் Daltonனின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Sinclair Danielனின் நடிப்பு. பல ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்திலும் பதின் வயது மகனுக்கும் குடும்பத்துக்கும் இடையேயான ஒரு பிரச்சனையை பேச முயற்சித்திருந்ததும் சிறப்பு. பிறகு வழக்கம் போல Insidious படங்களுக்கே உண்டான ட்ரேட் மார்க் ஜம்ப் ஸ்கேர் மொமண்ட்கள் சில இடங்களில் பயமுறுத்துகிறது.

இந்த காலத்தில் ஒரு ஹாரர் படம் எடுப்பது மிகக் கடினமான விஷயம். சின்னதாக வேலைக்காகவில்லை என்றாலும் ஹாரர் காட்சி காமெடி காட்சியாகிவிடும். அதுதான் இந்தப் படத்தில் பெரிய பிரச்சனை. இன்னுமும் வெறுமனே பகீர் இசையையும், திடீரென வரும் உருவத்தையும் வைத்தே பயமுறுத்த முயற்சி செய்கிறார்கள். மேலும் Insidiousன் முந்தைய பாகங்களுக்கும் இந்தப் படத்திற்குமான கனெக்ட் வைத்திருந்த விதமும் சோர்வைத் தருகிறது. அது எந்த விதத்திலும் படத்தை பூஸ்ட் செய்யவில்லை. மேலும் Astral Projection என்பதெல்லாம் நீர்த்துப் போன கான்செப்ட் ஆகிவிட்டது, இன்னுமும் அதை வைத்து உருட்டிக் கொண்டிருப்பதெல்லாம் செம போங்கு. பேய் என்று சொன்னாலே நான் பயப்படுவேன் என்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். ஆனால், நேர்த்தியான ஒரு படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும்.

Insidious பட வரிசையில் இதுதான் கடைசி பாகம் என சொல்லப்படுகிறது, அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் Insidious பட வரிசையிலேயே இதுதான் வீக்கான படமாக இருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com