சினிமாவாகிறது சுவாதி கொலை வழக்கு

சினிமாவாகிறது சுவாதி கொலை வழக்கு
சினிமாவாகிறது சுவாதி கொலை வழக்கு
Published on

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட சுவாதி கொலை சம்பவம் சினிமாவாகிறது.

விஜயகாந்த் நடித்த, உளவுத்துறை, அருண் விஜய் நடித்த ஜனனம், வஜ்ரம் ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.டி.ரமேஷ் செல்வன். இவர், இப்போது இயக்கும் படத்துக்கு ’சுவாதி கொலை வழக்கு’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட சுவாதியின் கொலை சம்பவ கதையாகும்.

ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் சார்பில் எஸ்.கே. சுப்பையா தயாரிக்கும் இந்தப் படத்தில், சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக, அஜ்மல் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதியாக, ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் ஏ.வெங்கடேஷ், வக்கீலாகவும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு, ஜோன்ஸ் ஆனந்த். இசை, ஷாம் டி ராஜ். கதை வசனத்தை இயக்குனர் ஆர்.பி.ரவி எழுதியுள்ளார். இவர் ஏற்கெனவே விமல் நடித்த ’சில்லுன்னு ஒரு சந்திப்பு’ மற்றும் ’தற்காப்பு’ படங்களை இயக்கியவர்.

திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள ரமேஷ் செல்வன் கூறும்போது, ’நிஜ சம்பங்களை படமாக்கும் போது சுவாரஸ்யத்திற்காகவும் பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால் சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். மக்களுக்குத் தெரிவிக்கப்படாத பல சம்பவங்கள் இதில் இடம் பெற்றுள்ளது’ என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com