‘மணி ஹெய்ஸ்ட்’ கொரிய ரீமேக்: நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ்

‘மணி ஹெய்ஸ்ட்’ கொரிய ரீமேக்: நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ்
‘மணி ஹெய்ஸ்ட்’ கொரிய ரீமேக்: நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ்
Published on

மணி ஹெய்ஸ்ட்’ கொரிய ரீமேக்கில் நடிக்கும் நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.

உலகம் முழுக்க அதிகர் ரசிகர்களைக் கொண்ட’மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸ் நிறைவடைந்ததையடுத்து தற்போது கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரிய மொழியில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை டீசராக வெளியிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். புரஃபசர் கதாபாத்திரத்தில் ஜூ ஜி டேவும், பெர்லினாக ’ஸ்க்விட் கேம்’மில் கவனம் ஈர்த்த பார்க் ஹே சூவும், டோக்கியோவாக ஜூன் சாங் சியோ, ரியோவாக லீ ஹியூன் வூ, நைரோபியாக ஜாங் யூன் வூவும் நடிக்கிறார்கள்.

நடிகர்களின் அறிமுக டீசரோடு விரைவில் வெப் சீரிஸும் வெளியாகவிருக்கிறது என்ற அப்டேட்டையும் தெரிவித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com