மலையாள சினிமாவில் பாலியல் புகார் எதிரொலி| பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்!

தன்னுடைய மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
மோகன்லால்
மோகன்லால்எக்ஸ் தளம்
Published on

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

இதுபற்றி டபிள்யூ சி.சி.அமைப்பின் நிறுவன உறுப்பினரும் நடிகையுமான ரேவதி, ”இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் இப்போது தீவிரமாக எடுத்துக்கொள்ள தொடங்கி உள்ளனர். திரை உலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் இந்த பிரச்னைக்கு கருத்து எதுவும் சொல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் எங்களைப்போலவே அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாங்கள் பேசுகிறோம். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, இதுதொடர்பாக நடிகர் சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இந்தப் பிரச்னைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன. நீங்கள் (ஊடகம்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழிநடத்துகிறீர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: அசாம் | முகநூலில் இந்தியாவுக்கு எதிராக லைக்.. சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட வங்கதேச மாணவி!

மோகன்லால்
"மலையாள திரையுலகில் மோசமாக நடத்தப்படும் பெண்கள்" - ஆர்டிஐ மூலம் வெளியான நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கை!

இதற்கிடையே, தன்னுடைய மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் {AMMA} இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் அவர்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதற்குக் காரணம் சங்கத்து உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இது கடந்த சில நாட்களாக அனைத்து பத்திரிகை ஊடங்களில் பேசும்பொருளாக இருக்கிறது.

இதனால் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் தார்மீக அடிப்படையில் செயற்குழுவை கலைக்க தீர்மானம் செய்துள்ளோம். புது செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் மறுதேர்தல் வைத்து இன்னும் 2 மாதங்களில் உருவாக்கப்படும்.

மேலும், புது செயற்குழு மற்றும் தலைமை பொறுப்பு விரைவில் இந்த சங்கத்தை மீண்டும் புதிய பலத்துடனும், உத்வேகத்துடனும் மீட்டெடுக்கும். எங்கள்மேல் உள்ள பிழையை சுட்டிக்காட்டியதற்கு அனைவருக்கும் நன்றி” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’1 கிலோ ஜிலேபி வாங்கி வா’- புகார்கொடுக்க சென்றவரிடம் உத்தரவிட்ட போலீஸ்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!

மோகன்லால்
ஹேமா கமிட்டி | “அனைத்தும் மிக தீவிரமாக கையாளப்பட வேண்டும்” - பிரித்விராஜ் அளித்த அதிர்ச்சி தகவல்கள்!

இதனைத் தொடர்ந்து தற்போது வங்காள நடிகையான ரிதாபாரி சக்ரவர்த்தி கேரளத்தில் நடப்பதைப் போலவே பெங்காலி திரைத்துறையில் தனக்கும் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், திரைத்துறையே பாலியல் தொழில் நடக்கும் விடுதிபோல இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை ரிதாபாரி சக்ரவர்த்தி பதிவில், “பெண்களை வெறும் சதைப்பிண்டங்களாக நினைக்கும் இவர்கள்தான் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவருக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்வார்கள்.

இத்தகைய கொடூரமானவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும். இந்த அரக்கர்களுக்கு எதிராக நிற்க என் சக நடிகைகளை நான் அழைக்கிறேன். இந்த ஆண்களில் பெரும்பாலானோர் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காது என நீங்கள் அச்சப்படுவது எனக்குத் தெரியும். ஆனால், எவ்வளவு நாள்கள் நாம் அமைதியாக இருப்பது. பெரும் கனவுகளோடு இந்தத் துறைக்கு வரும் இளம் நடிகைகள் மீது நமக்கு பொறுப்பு இல்லையா? இந்தத் துறை இனிப்பு தடவிய பாலியல் தொழில் நடக்கும் விடுதி என்று அவர்கள் அறியவேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஐசிசி சேர்மனாகும் ஜெய் ஷா? அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?

மோகன்லால்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல நடிகர் ரியாஸ் கான்! போனில் அத்துமீறி பேசியதாக நடிகை புகார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com