“60 ரூபாய்க்கு ஆர்மோனிய பெட்டியை அண்ணன் வாங்கி தந்தார்” - இளையராஜா

“60 ரூபாய்க்கு ஆர்மோனிய பெட்டியை அண்ணன் வாங்கி தந்தார்” - இளையராஜா
“60 ரூபாய்க்கு ஆர்மோனிய பெட்டியை அண்ணன் வாங்கி தந்தார்” - இளையராஜா
Published on

தவறுகளே சிறந்த ஆசான் எனவும், அதன் மூலமாகவே நாம் கற்றுக்கொள்ள முடியும் எனவும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற இளையராஜா மாணவர்களுடன் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, பாடல்களை பாடியும், மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் செய்த அவர், ஒரு மாணவிக்கு பாடும் பயிற்சியையும் மேடையிலேயே அளித்து அசத்தினார். தொடர்ந்து பேசிய இளையராஜா, தவறுகளே சிறந்த ஆசான் எனவும், அதன் மூலமாகவே நாம் கற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும் இசை குறித்து பேசிய இளையராஜா இசையை பற்றி தமக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை என்றும் ஒருவேளை முழுமையாக தெரிந்திருந்தால் தாம் இசையமைப்பதை என்றோ விட்டிருப்பேன் என்றும் கூறினார். 
தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் இசையை பதிவு செய்து கேட்டால் அந்த இசையை முழுமையாக உணரமுடியவில்லை. நீங்கள் கேட்பது நல்ல இசை போன்ற மாயத்தோற்றமே. பழைய தொழில்நுட்பம் மூலமே உண்மையான இசையை உணர முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் தன்னிடம் உள்ள ஆர்மோனியம் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்ட இளையராஜா, 1959 அல்லது 1960ம் ஆண்டு இருக்கும், கோயமுத்தூரில் இருந்து ரூ.60க்கு இந்த ஆர்மோனியம் பெட்டியை தன் அண்ணன் வாங்கி வந்தார். உலகிலேயே விலை மதிப்புமிக்க பொருள் என்னவென்று என்னிடம் கேட்டால், நான் இந்த ஆர்மோனியத்தை தான் காட்டுவேன். நீங்கள் கேட்கும் இசை என்னிடம் இருந்து வரவில்லை. இந்த ஆர்மோனியத்தில் இருந்து தான் வருகிறது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com