பெண்களுக்குத் தன்னம்பிக்கையளிக்கும் கீர்த்தி சுரேஷின் ’மிஸ் இந்தியா’ ட்ரைலர்!

பெண்களுக்குத் தன்னம்பிக்கையளிக்கும் கீர்த்தி சுரேஷின் ’மிஸ் இந்தியா’ ட்ரைலர்!
பெண்களுக்குத் தன்னம்பிக்கையளிக்கும் கீர்த்தி சுரேஷின் ’மிஸ் இந்தியா’ ட்ரைலர்!
Published on

’மிஸ் இந்தியா’ தலைப்பையும் கீர்த்தி சுரேஷின் மெலிந்த உடலைப் பார்த்ததும்  எதோ அழகிப் போட்டியில் கலந்துகொண்டு கீர்த்தி சுரேஷ் பட்டம் வெல்லப்போகும் கதை என்று நினைத்தால், மிஸ் இந்தியா என்பது வெறும் அழகுக்கானது மட்டும்தானா? அது பிஸினஸ், விண்வெளித்துறை, விஞ்ஞானம், ராணுவம் என பல துறைகளில் சாதிக்கும் பெண்களின் கதைகளாக இருக்கக்கூடாது? அவர்களை மிஸ் இந்தியாவாக பார்க்கமாட்டீர்களா? என்று நம் சமூகத்தின் முகத்தில் அறைந்ததுபோல் ட்ரைலரை உணர்த்துகிறது.

 குழந்தைகளிடம் ’பெரியவர்களானதும் என்னவாகப்போகிறாய்?’ என்று கேட்டால், பெரும்பாலும் டாக்டர் என்றுதான் பதில் வரும். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் கண்டிப்பாக டாக்டர் அல்லது டீச்சர் என்ற பதில்களே வரும். ஏனென்றால், பிசினஸ் என்றாலே ஆண்கள்தான் செய்வார்கள். அது பெண்களுக்கானது அல்ல என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அதனையெல்லாம் தாண்டி இந்திரா நூயி, சாந்தா கொச்சார், அருந்ததி பட்டாச்சார்யா என்று பலப் பெண்களின் வெற்றிக்கதைகள் நம்முன் கொட்டிக்கிடக்கின்றன.

 பிசினஸ் துறையில் பெண்களாலும் சாதிக்கமுடியும் என்பதை நிரூபிக்கும் விதமாகவும் பெண்ணம்பிக்கை கொடுக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ள மிஸ் இந்தியா ட்ரைலரில் ‘ ம்ம்மா சம்யுக்தா பெரியப் பொண்ணா ஆனதும் என்னப் பண்ணப்போற? என்று கேட்க, சிறுவயது கீர்த்தி சுரேஷ் ’ எம்.பி.ஏ முடிச்சிட்டு பிசினஸ் பண்ணப்போறேன்’ என்கிறார் அழுத்தமாக.

அவர், வளர்ந்தவுடன் ரசிக்கும்படியான பேக்ரவுண்ட் தீம் மியூசிக்கில் மார்டன் சாவித்ரியாக ஸ்டைலிஷ் லுக்கில் வந்து கொள்ளை கொள்பவரை பிசினஸ் செய்யக்கூடாது என்று அவரது அம்மாவாக நடித்திருக்கும் நதியா தடை போடுகிறார். அவரோடு, வில்லனாக நடித்துள்ள ஜகபதி பாபு, ’பிசினஸ் என்பது பொண்ணூங்க விளையாடும் விளையாட்டு அல்ல. அது ஒரு வார்’ என்கிறார். அந்த வாரையே வென்று ‘வாவ்’ சொல்ல வைப்போம் என்பதுபோல், ’நான் பிறந்ததே பிசினஸ் செய்யத்தான்’ கெத்தாக சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்,

உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பானமான தேநீர் தயாரிக்கப் பயன்படும் டீத்தூளை தரமுடன் தயாரித்து பிசினஸ் உலகில் சாதிக்கும் பெண்ணின் கதைதான் இப்படம் என்பதை ட்ரைலர் உரக்கச் சொல்கிறது.  ‘மிஸ் இந்தியா என்பது நான் கிடையாது. மிஸ் இந்தியா என்பது ஒரு பிராண்ட்’ என்று கீர்த்தி சுரேஷ் இறுதியில் பேசும்போது ’மிஸ் இந்தியா என்றாலே அழகிப்போட்டிதான்’ என்று கட்டமைக்கப்பட்டு வந்த அத்தனை சமூக கட்டமைப்புகளையும் உடைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

 பிசினஸ் உலகில் சாதிக்கதுடிக்கும் பெண்களை, மிஸ் இந்தியா இனிமேல் பிஸியாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படம் மட்டுமல்ல; கீர்த்தி சுரேஷும்தான் சினிமாவில் ஹீரோயின்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். ஏனென்றால், ஹீரோக்கள் மட்டுமே நடித்தால் ஓடும் என்ற நிலைமையை சமீப காலமாக மாற்றி துணிச்சலுடன் நாயகியை மையப்படுத்திய கதைகளில் நடித்து மற்ற நாயகிகளுக்கும் தெம்பைக் கொடுத்துள்ளார். மகாநடி, பெண்குயின், மிஸ் இந்தியா, குட்லக் சகி என கீர்த்தி சுரேஷின் பட்டியல் நீள்கிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com