மெர்சல் படத்தின் தலைப்பை பயன்படுத்த கூடாது என்று விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
ராஜேந்திரன் என்பவர் மெர்சலாகிட்டேன் என்ற தலைப்பை ஏற்கெனவே தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் அவரது ஏ.ஆர். ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனம் சார்பில் பதிவு செய்திருந்தார். இந்தத் தலைப்பை பயன்படுத்த கூடாது என அவர் தடை ஆணை கேட்டிருந்தார். இவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் முதலில் தடை வழங்கியது. அதோடு வெள்ளிக்கிழமை அன்று இதன் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் இன்று நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளதோடு மெர்சல் என்ற தலைப்பிலேயே படத்தை வெளியிடவும், விளம்பரப்படுத்தவும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கின் வாதியான ராஜேந்திரன் தனது படத்தின் தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் மட்டுமே பதிவு செய்திருக்கிறார். ஆனால் விஜய் தரப்பில் படத்தின் தலைப்பிற்கு தேனாண்டாள் நிறுவனம் வணிக குறியீடே வாங்கியுள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.