“என் கனவு நிஜமாகிவிட்டது” - ‘பேட்ட’ மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்

“என் கனவு நிஜமாகிவிட்டது” - ‘பேட்ட’ மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்
“என் கனவு நிஜமாகிவிட்டது” - ‘பேட்ட’  மகிழ்ச்சியில் மேகா ஆகாஷ்
Published on

ரஜினிகாந்த் உடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை மேகா ஆகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘பேட்ட’.  இப்படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. அதில் ரஜினி பங்கேற்ற சண்டைக்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் நேற்று படக்குழுவினருக்கு தெரியாமல் கசிந்தது. அதனையொட்டி ஒரு வீடியோ பதிவும் இணையத்தில்  பரவலாக பகிரப்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் மொத்தம் 40 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. ஆனால் அதனை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. இப்படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ் எனப் பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேகா ஆகாஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி, அவரது தோள்மீது அரவணைத்தபடி கை போட்டுள்ளார். அப்படத்தை பற்றி மேகா, “கனவுகள் உண்மைதான். சிலநேரங்களில் உங்களால் நட்சத்திரங்களை கூட தொட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு கீழாகவே அவர் ரஜினியின் மருமகன் தனுஷுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படமும் உள்ளது. அதில் “திறமையான நடிகருடன் நான். இவரிடம் இருந்து நிறைய கற்றுகொண்டேன். ஒரு மனிதரிடம் எத்தனை திறமைகள் இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் தனுஷுடன் சேர்ந்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’வில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் மாமனாருடனும் மருமகனுடனும் சேர்ந்து நடிக்கும் நடிகையாக மேகா ஆகாஷ் வலம் வர தொடங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com