கலாபவன் மணியாக மாறிய மிமிக்ரி கலைஞர்!

கலாபவன் மணியாக மாறிய மிமிக்ரி கலைஞர்!
கலாபவன் மணியாக மாறிய மிமிக்ரி கலைஞர்!
Published on

’கலாபவன் மணி வாழ்க்கைக் கதையில் முழுவதுமாக அவராகவே மாறி நடித்துள்ளேன்’ என்று மிமிக்ரி கலைஞரும் நடிகருமான ராஜாமணி தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. காமெடி, குணசித்திரம், வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்துள்ள அவர், 2016- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டோ டிரைவராக இருந்து மிமிக்ரி மூலம் வளர்ந்து நடிகரானவர் கலாபவன் மணி. 

அவரது வாழ்க்கை கதை இப்போது சினிமாவாகியுள்ளது. இதை பிரபல இயக்குனர் விநயன் இயக்கியுள்ளார். இவர் தமிழில் காசி, என் மனவானில், நாளை நமதே படங்களை இயக்கியவர். கலாபவன் மணியின் படத்துக்கு ’சாலக்குடிகாரன் சங்கதி’ என்று டைட்டில் வைத்துள் ளனர். இதில் கலாபவன் மணியாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் ராஜாமணி நடித்துள்ளார். ஹீரோயினாக ஹனி ரோஸ் நடித்துள்ளார். படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதில் நடித்தது பற்றி ராஜாமணி கூறும்போது, ’சின்ன வயதில் இருந்தே மிமிக்ரி செய்து வந்தேன். வெளிநாடுகளிலும் மிமிக்ரி செய்துள்ளேன். இயக்குனர் விநயன், என்னை நடிக்க அழைத்ததும் ஆச்சரியமாக இருந்தது. கலாபவன் மணியுடன் ’புள்ளிமான்’ என்ற படத்தில் சிறு கேரக்டரில் நடித்தேன். இரண்டு பேரும் இணைந்து சில மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளோம்.

அதனால் அவரது உடல்மொழி எனக்கு நன்றாகத் தெரியும். அவர் திடீரென்று தென்னை மரத்தில் ஏறுவார், ஆற்றில் குதிப்பார், எருமைமாடுகளுடன் பேசுவார்... படத்திலும் அவரை போல அப்படியே செய்திருக்கிறேன். இதில் நீச்சல், மரம் ஏறுதல் போன்றவற்றைப் படத்துக்காகக் கற்றேன். இந்தப் படம் அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஊரில் ஆட்டோ ஓட்டிய காலங்களை மட்டும் பேசுகிறது. கமர்சியல் படமாக இதை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் விநயன்’ என்றார் ராஜாமணி! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com