நடிகை மீரா சோப்ரா தன்னை முன்கள பணியாளர் என பதிவு செய்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் ‘அன்பே ஆருயிரே’, ‘லீ’, ‘மருதமலை’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா சோப்ரா. இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் அது தொடர்பான புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த நிலையில் மீரா தன்னை முன்கள பணியாளர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு தடுப்பூசியை பெற்று கொண்டார் என்று கூறி, அதுதொடர்பான அடையாள அட்டை ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
சர்ச்சைக்குள்ளான அடையாள அட்டை
அதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும் போது, “ நம்ம எல்லாத்துக்கும் தடுப்பூசி வேணும். அதுக்காக நம்மால் முடிந்த முயற்சியை எடுக்கிறோம். அப்படிதான் நானும் எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட உதவி கெட்டேன். ஒரு மாத முயற்சிக்குப்பிறகு ஒரு சென்டர்ல கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதிவு செஞ்சேன். அதற்காக அவங்க கேட்டு கொண்டதன் பேரில் என்னோட ஆதார்டு கார்டை அனுப்பினேன். சமூக வலைதளங்களில் உலாவிக்கிட்டு இருக்கும் ஐடி கார்டு என்னோடது இல்லை. தடுப்பூசியை பதிவு செய்றதுக்கு என்னிடம் ஆதார் கார்டு கேட்டார்கள். அதனால நான் அதைமட்டுதான் கொடுத்தேன். உங்கள் கையெழுத்து இல்லாத வரை எந்த அடையாள அட்டையும் செல்லாது.
சமூகவலைதலங்களில் உலாவும் ஐடியை முதன்முறையாக ட்விட்டரில் பார்த்தேன். நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். எதுக்காக இந்த மாதிரியான ஐடியை உருவாக்குனாங்க, எப்படி உருவாக்குனாங்க நானும் தெரிஞ்சுக்கனும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.