நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு முன் திரண்ட விஜய் ரசிகர்களை காவல்துறை, அதிரடிப்படையினர் விரட்டியடித்தனர்.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி.யில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, ‘பிகில்’ பட வருவாய் ஏய்ப்பு புகார் தொடர்பாகப் படப்பிடிப்பிலிருந்த விஜய்யை, இரு தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். வருமான வரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் மீண்டும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திற்கு முன் விஜய் ரசிகர்கள் திரண்டனர். நடிகர் விஜய்யைக் காண்பதற்காக அதிக ரசிகர்கள் திரண்டதால் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறை கூட்டத்தைக் கலைந்துப் போகக் கூறினர்.
ஆனாலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், காவல்துறை மற்றும் அதிரடிப்படையினர் அங்குக் கூடியிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
வீடியோ: