கான் விழாவில், மருதநாயகம்! தூசி தட்டுகிறாரா கமல்?

கான் விழாவில், மருதநாயகம்! தூசி தட்டுகிறாரா கமல்?
கான் விழாவில், மருதநாயகம்! தூசி தட்டுகிறாரா கமல்?
Published on

பிரான்ஸில் நடைபெறும் கான் திரைப்பட விழாவில் கமல்ஹாசனின் ’மருதநாயகம்’ படத்தின் போஸ்டரும் அந்தப் படத்தின் புகைப்படங்கள் அடங்கிய புத்தகமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் படம் மீண்டும் உருவாகும் சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம், ‘மருதநாயகம்’. கமல்ஹாசன் நடித்து தயாரித்து இயக்க இருந்தார். இதன் தொடக்கவிழாவில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் கனவு படமான, இதில் சத்யராஜ், விஷ்ணுவர்தன், நாசர், அம்ரிஷ் பூரி உட்பட பலர் நடிப்பதாக இருந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்னை காரணமாக படம் கைவிடப்பட்டது. இதில் நடிப்பதாக இருந்த விஷ்ணுவர்தனும் அம்ரிஷ் புரியும் இன்று உயிரோடில்லை.

இதற்கிடையே பல்வேறு பேட்டிகளில், ’அந்த பட்ஜெட்டிற்கான தயாரிப்பாளர் கிடைத்தால் மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்குவேன்’ என்று கூறிவந்தார் கமல்.

இந்நிலையில் பிரான்ஸில் நடக்கும் கான் படவிழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதோடு, கமலின் ‘மருதநாயகம்‘ படத்தின் போஸ்டர்களையும் அங்கு திரையிட்டுள்ளனர். ‘மருதநாயகம்’ படத்தின் புகைப்படங்கள் அடங்கிய புத்தகமும் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் மருதநாயகத்தை கமல் மீண்டும் தொடங்க இருக்கிறார் என தெரிகிறது. இதை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com