தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ - ‘குணா’ கமலை புகழ்ந்து தள்ளிய மலையாள இயக்குநர்!

கமலின் குணா திரைப்படம் படம்பிடிக்கப்பட்ட மலைக்குகையில் படமாக்கப்பட்டிருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மலையாள இயக்குநர் கமல்ஹாசனை புகழ்ந்து பேசியுள்ளார்.
மஞ்சும்மல் பாய்ஸ் - குணா
மஞ்சும்மல் பாய்ஸ் - குணாX
Published on

எந்த மொழியில் சிறந்த படங்கள் வந்தாலும் தமிழ் ரசிகர்கள் அதனை கொண்டாட தவறியதே இல்லை. அதிலும் மலையாள திரைப்படங்கள் நன்றாக இருந்துவிட்டால் போதும் நிச்சயம் கொண்டாடி, சிலாகித்து தள்ளிவிடுவார்கள். அப்படிதான், அந்த வரிசையில் இணைந்துள்ளது மலையாள திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டின் கொடைக்கானல் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்பது தான். குறிப்பாக, குணா குகை பகுதியில் நடந்த சம்பவம் இது.

“மனிதர் உணர்ந்து கொள்ள இது..” - எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

‘மஞ்சும்மல் பாய்ஸ்’படத்தின் ட்ரெய்லரிலேயே கண்மணி அன்போடு காதலன் பாடலின் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற வரிகளை படத்தில் வரும் இளைஞர்கள் பாடுவதுபோல் வரும். அதோடு, கமலின் குரலிலும் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும். அப்போது, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே எக்கச்செக்கமாக எகிறியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறது.

மஞ்சும்மல் பாய்ஸ்
மஞ்சும்மல் பாய்ஸ்

படம் பார்த்த ரசிகர்கள் அப்படி கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட மலையாளத்தில் சில முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ் சூழலில் படத்தின் பெரும்பகுதி நடைபெறுவதால் ஜார்ஜ் மரியன், நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு படங்களில் நடித்த ராம சந்திரன் துரைராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: ஒரு செய்தியை இவ்வளவு அழகாக மாற்றி அனுப்ப முடியுமா! WhatsApp கொண்டு வந்த அசத்தலான ’TEXT’ அப்டேட்!

ஹைப் ஏற்றிய உதயநிதி ஸ்டாலின்!

இந்தப் படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அவர தனது பதிவில், “மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்தேன்.. செம்ம படம்! தவறவிடாதீர்கள்! படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு வாழ்த்து இருந்தார்.

4 நாட்களில் 36 கோடி ரூபாய் வசூல்

பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானமஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது. ஆனால், படம் குறித்து பாசிட்டிவ் ஆன கருத்துகள் வைரல் ஆகவே வார இறுதி நாட்களான 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் திரையரங்கு நிரம்பி வழிந்தது. 4 நாட்களில் இந்தப் படம் 36.11 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சும்மல் பாய்ஸ்
மஞ்சும்மல் பாய்ஸ்

இந்தப் படத்திற்கு முன்பு வந்திருந்த மம்முட்டியின் பிரம்மயுகம் மற்றும் பிரேமலு ஆகிய திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிரம்மயுகம் 11 நாட்களில் 1.8 கோடியும், பிரேமலு 17 நாட்களில் 1.26 கோடியும் வசூல் செய்த நிலையில், மஞ்சும்மல் திரைபடம் 4 நாட்களிலேயே ரூ1.36 கோடி வசூலித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: ”அரசியல்வாதி மகனால் கேப்டன் பதவியை இழந்தேன்!” - அதிர்ச்சி பதிவிட்ட ஹனுமா விஹாரி! நடந்தது என்ன?

“சினிமாவுக்காக பிறந்தவர்” - கமலை புகழ்ந்த இயக்குநர் சிதம்பரம்

மஞ்சும்மல் பாய்ஸ் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் சிதம்பரம் கமல்ஹாசனை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அவர் பேசுகையில், “நான் மிகப்பெரிய கமல்ஹாசன் ரசிகன். கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்ல சிறந்த இயக்குநர். பிரிலியண்ட் இயக்குநர். விருமாண்டி போன்ற அவர் இயக்கிய படங்கள் சிறப்பானவை. அவர் சினிமாவுக்காகவே பிறந்தவர்.

குணா திரைப்படம்
குணா திரைப்படம்

இன்றைக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருக்கிறது. மொபைலில் கூட படம் எடுத்துவிடலாம். ஆனால், 1990 களில் அவர் எப்படி குணா படத்தை எடுத்தார் என்பது வியப்பாக இருக்கிறது. அதுவும் படத்தின் பெரும்பகுதி அந்த குகையில், குறிப்பாக அந்த பாடல் எல்லாம் நினைத்தாலே வியப்பாக இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ரீ-ரிலீஸ் செய்யுங்களேன்! - ரசிகர்கள் கோரிக்கை

குணா திரைப்படம்
குணா திரைப்படம்

ரீ-ரிலீஸ் என்பது தற்போதைய ட்ரெண்ட். தமிழில் வெளியாகி ஹிட் அடித்த கில்லி, பருத்திவீரன் உள்ளிட்ட பல படங்கள் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் குணா படத்தையும் ரி-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: சர்ஃபராஸை மறைமுகமாக தாக்கி பேசிய சேவாக்! தோனியை வைத்து பதில் அட்டாக் செய்த ரசிகர்கள்! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com