‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மறுப்பு - மும்பை உயர்நீதிமன்றம்

‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மறுப்பு - மும்பை உயர்நீதிமன்றம்
‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மறுப்பு - மும்பை உயர்நீதிமன்றம்
Published on

நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள ‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ள திரைப்படம் ‘மணிகர்ணிகா’. இந்தப் பட ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜான்சி ராணியின் வேடத்தில் கங்கனா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகள் வெளிவரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அத்துடன் கங்கனாவின் கடைசி இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால், அந்த இழப்பை இந்தப்படம் ஈடுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் நாளை (ஜனவரி 25) உலக அளவில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தில் ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக மகாராஷ்டிராவின் பட்லபூரைச் சேர்ந்த விவேக் என்பவர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் திரைப்படம் தொடர்பாக மோசடி புகார் ஒன்றையும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், உல்ஹாஷ்நகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு வழக்கு விசாரிக்கப்பட்டபோது, படத்திற்கு அவர் தடை கோரினார். ஆனால் நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.

இதனால் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த விவேக், அங்கு ஜான்சி ராணியின் பிறந்த இடம், வருடம், வாழ்க்கை ஆகியவை தவறாக சித்தரிக்கப்படுவதாக புகார் தெரிவித்தார். எனவே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். வாதங்களை கேட்ட நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அத்துடன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய படக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com