எதார்த்த சினிமாவின் அழகன்.... நடிகர் மம்முட்டி பிறந்ததினம் இன்று..!

எதார்த்த சினிமாவின் அழகன்.... நடிகர் மம்முட்டி பிறந்ததினம் இன்று..!
எதார்த்த சினிமாவின் அழகன்.... நடிகர் மம்முட்டி பிறந்ததினம் இன்று..!
Published on

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் மம்முட்டி

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் என்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி மொழி படங்களில் நடித்த அனுபவங்களும் அவருக்கு உண்டு. அவருக்கு இன்று பிறந்தநாள். 

கேரளாவின் சந்திரூரில் 1951இல் பிறந்தவர். மிடில் கிளாஸ் குடும்பம். அவரது அப்பா மொத்த வியாபாரம் செய்து வந்துள்ளார். 

கோட்டயத்தில் உள்ள செம்பு கிராமத்தில் வளர்ந்தவர். ஆனந்தம் படத்தில் வருவது போல நிஜ வாழ்க்கையில் அவரது வீட்டில் மம்முட்டி தான் மூத்தவர். அவருக்கு அடுத்ததாக இரண்டு தம்பிகள் மற்றும் மூன்று தங்கைகள்.

இளங்கலைச் சட்டம் முடித்தவர் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராகவும் பயிற்சி செய்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் மெளனம் சம்மதம் படத்தில் அசத்தலாக வக்கீல் கதாப்பாத்திரத்தில் மம்முட்டி நடித்திருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. 

நடிப்பின் மீது நாட்டம் வர 1971இல் அனுபவங்கள் பாலிச்சகள் என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக களம் கண்டார். 1979க்கு பிறகு லீட் ரோலில் நடிக்க ஆரம்பித்தார். மெல்ல தனது எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வந்தார். 

1987இல் வெளியான நியூ டெல்லி திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக மம்முட்டிக்கு ஹிட் கொடுத்தது. குறிப்பாக 1982 துவங்கி 1987 வரை சுமார் 150 படங்களில் நடித்திருந்தார். 

1989இல் வெளியான மதிலுகள் திரைப்படத்திற்காக முதல்முறையாக தேசிய விருதை வென்றிருந்தார் மம்முட்டி. 

பின்னர் மலையாள படங்களில் நடித்துக் கொண்டே தமிழ் உட்பட தென்னிந்திய படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தினார். அவரது தமிழ் உச்சரிப்பு அட்டகாசமாக இருக்கும். அழகன், தளபதி, ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படங்கள் அதற்கு சாட்சி.

தளபதி படத்தில் மம்முட்டி நடித்த கதாபாத்திரம் பல தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்.  

தன் திரை வாழ்க்கையை ஆரம்பித்தது முதல் இன்று வரை 40 ஆண்டுகளாக ஆக்டிவாக நடித்துக் கொண்டிருக்கிறார் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி.

அவரது நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருதை வென்றுள்ளார்.

ஹேப்பி பார்த் டே...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com