நிஜ ஜல்லிக்கட்டு வீரர்களை பயன்படுத்தியுள்ளோம்: “மதுரவீரன்” முத்தையா

நிஜ ஜல்லிக்கட்டு வீரர்களை பயன்படுத்தியுள்ளோம்: “மதுரவீரன்” முத்தையா
நிஜ ஜல்லிக்கட்டு வீரர்களை பயன்படுத்தியுள்ளோம்: “மதுரவீரன்”  முத்தையா
Published on

 விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள “மதுரவீரன்”  படத்தை பற்றி தனது அனுபவங்களை இயக்குநர் முத்தையா பகிர்ந்து கொண்டுள்ளார்.

“ நான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஓரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால்தான் “மதுரவீரன்” கதை உருவானது. இப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டுமல்ல; அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் படத்தில் இல்லை. இப்படத்தில் உள்ள அனைத்து  கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “ இப்படம் உண்மையான சம்பவங்களின் அடிப்படையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் சிறிய பீரியட் பிளாஷ் பேக் காட்சியில் அந்தப் பகுதியிலுள்ள உண்மையான பிரபலமான மாடுபிடி வீரர்களின் பெயர்களும் அந்தப் பகுதியில் உள்ள பிரபலமான மாடுபிடி வீரர்களையும் படத்தில் பயன்படுத்தியுள்ளோம். 

கேப்டன் பற்றி நமக்கு எல்லாம் தெரியும். பிரேமலதா மேடம் படத்தின் இசையமைப்பாளர் யார், எடிட்டர் யார் என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் கேப்டன் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் யார் என்றுதான் கேட்டார். அந்த அளவுக்கு சண்டை காட்சிகளில் தீவிரமாக இருந்தார். சண்முக பாண்டியனும் சண்டைக் காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். சண்முக பாண்டியனின் உயரம் 6.3 அடி இருக்கலாம்.  படத்தில் ஹீரோவிற்கு அருகில் நிற்கும்போது குறைந்த 6 அடி உயரம் இருக்க வேண்டும்.  18 முதல் 20 வயதுடைய மதுரையை சார்ந்த ஓரு பெண்ணாக இருக்கவேண்டும் என்றும் ஹீரோயின் தேடினோம். எனவே புதுமுகமாக இருந்தால் போதுமானதாக இருக்கும் என்று தேர்வு செய்தோம். 

படத்தில் “மதுரவீரன்” சமுத்திரகனிதான். படத்தில் அவருடைய கேரக்டர் “ரத்னவேலு”. சண்முக பாண்டியனின் தந்தை கதாபாத்திரம். ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க 3 நடிகர்களை நான் எண்ணி இருந்தேன். முதலாவதாக ராஜ்கிரண், இரண்டவதாக சத்யராஜ், மூன்றாவதாகதான் சமுத்திரகனி. படத்தின் மிக முக்கியமான மிக வலுவான கதாபாத்திரம் அவருடையது.”  என்றார் இயக்குநர்  முத்தையா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com