தற்போதுள்ள சூழலில் ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு மேல் ஓடுவதே அரிதாக உள்ளது. இந்நிலையில் திரைப்படங்களை வெளியிடுவதில் புதுமையைக் கையாளத் துவங்கியுள்ளனர் மதுரை to தேனி படக்குழுவினர்.
காலங்களுக்கு ஏற்ப புதுமையான தொழில்நுட்பங்கள் மூலமாகவும் ஐடியாக்கள் மூலமாகவும் தன்னைத் தானே அப்டேட் செய்துகொள்வது மட்டுமல்லாமல், அந்தந்த காலத்திற்கான ட்ரெண்டுகளை அமைத்து தருபவை திரைப்படங்கள். ஆனாலும் திரைப்படங்கள் வெளியாகும் முறை மட்டும் தொன்றுதொட்டு மாறாமல் உள்ளது. இதிலும் புதுமையை புகுத்துவதற்கான முன்னெடுப்புகளை மதுரை to தேனி படக்குழுவினர் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் திருட்டு டிவிடிக்களையும், அனுமதியின்றி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்படுவதையும் ஓரளவிற்கு குறைக்க முடியும் என நம்புகிறார் படத்தின் இயக்குநர். மேலும் பென்ரைவ், ஷேர்இட் போன்றவைகளில் 20 முதல் 50 ரூபாயில் படத்தை வாங்கிக்கொள்ள தனியாக விநியோகஸ்தர்களையும் நியமித்துள்ளனர்.
மக்கள் அதிகமாக பயன்படுத்தும் தளங்களில் புதுப்படங்களை முறையாக வெளியிடுவதால், லாபம் அதிகரிக்கும் என்பதோடு பெரும்பாலானவர்களையும் சென்றடையும் என்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.