மதுரை: மாற்றுத் திறனாளிகளை தி லெஜெண்ட் படத்திற்கு அழைத்துச் சென்ற தனியார் நிறவனம்

மதுரை: மாற்றுத் திறனாளிகளை தி லெஜெண்ட் படத்திற்கு அழைத்துச் சென்ற தனியார் நிறவனம்
மதுரை: மாற்றுத் திறனாளிகளை தி லெஜெண்ட் படத்திற்கு அழைத்துச் சென்ற தனியார் நிறவனம்
Published on

மதுரையில் தி லெஜெண்ட் திரைப்படத்திற்கு நூறு மாற்றுத் திறனளிகளை தனியார் உணவுப்பொருள் நிறுவனத்தினர் அழைத்துச் சென்றனர்.

பிரபல தொழிலதிபரும், சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணா அருள் 'தி லெஜெண்ட்' என்ற தமிழ் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்கில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த தனியார் உணவுப்பொருள் நிறுவனம் 100 மாற்றுத் திறனாளிகளை தி லெஜண்ட் திரைப்படத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக மத்திய அரசின் தயான்சந்த் விருதுபெற்ற மாற்றித் திறனாளிகளின் பயிற்சியாளர் ரஞ்சித் தி லெஜெண்ட் படத்திற்கான டிக்கெட்டுகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com