விஜயகாந்த் மகனின் 'என்ன நடக்குது நாட்டுல'

விஜயகாந்த் மகனின் 'என்ன நடக்குது நாட்டுல'
விஜயகாந்த் மகனின் 'என்ன நடக்குது நாட்டுல'
Published on

வி ஸ்டுடியோஸ் மற்றும் பி.ஜி. மீடியா வொர்க்ஸ் வழங்கும் படம் ’மதுரைவீரன்’. விஜி சுப்ரமணியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார். 

மீனாட்சி, வேல ராமமூர்த்தி, பால சரவணன், உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் பி.ஜி.முத்தையா. 

இப்படத்தின் ஒரு பாடலான ’என்ன நடக்குது நாட்டுல’  இன்று காலை வெளியிடப்பட்டது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது. 

நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பே, ’என்ன நடக்குது நாட்டுல’ என்ற ஹேஷ் டேக்கில் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் பற்றி ட்வீட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.


 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com