‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம்

‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம்
‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம்
Published on

நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தை கேமியோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஸ்ரீகிரீன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மினிமம் கேரண்டி அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 படத்தின் விநியோக உரிமை பெற்ற ஸ்ரீகிரீன் நிறுவனம், அப்படத்தின் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளுக்கான விநியோக உரிமையை ஆர்.வி.மீடியா என்ற நிறுவனத்துக்கு 4 கோடி ரூபாய்க்கு வழங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்தப் படத்தை ஸ்ரீகிரீன் நிறுவனத்தின் விநியோகஸ்திலேயே, ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் படம் வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஆர்.வி.மீடியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தது.

 அதில் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவுக்கான விநியோக உரிமை தங்கள் நிறுவனத்துக்குதான் என உத்தரவிடவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எம்.சுந்தர் விசாரித்தபோது, ஆர்.வி. மீடியாவுடனான ஒப்பந்தம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஸ்ரீகிரின் நிறுவனம் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

 அதன்பின்னர், படத்தை வெளியிட தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். அதேசமயம் இருவருக்கும் இடையேயான ஒப்பந்தத்திற்காக 4 கோடி ரூபாயை ஸ்ரீகிரின் நிறுவனம் பெற்றது நிரூபணம் ஆவதால், படத்தை வெளியிட்டு முதலில் வருகின்ற 4 கோடி ரூபாய் வருமானத்தை ஆர்.வி. மீடியாவுக்கு வழங்க வேண்டுமெனவும், அதற்கு மேலான வருமானத்தை ஸ்ரீகிரீன் எடுத்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

‘டிமான்ட்டி காலனி’  இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் இன்று திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. படத்தை வெளியிடலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பிற்பகல் முதல் திரையரங்குகளில் படம் வெளியாகும் என தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com