”100 முறைக்கு மேல் பார்த்தாலும் தாக்கம் குறையவில்லை..”! கங்குவா படத்தை பாராட்டிய மதன் கார்க்கி!

கங்குவா திரைப்படத்தின் உருவாக்கம் குறித்து பேசியிருக்கும் பாடலாசிரியர் மதன் கார்க்கி, டப்பிங்கின்போது படத்தின் காட்சிகளை பார்த்து வியந்துபோன தருணத்தை பகிர்ந்துள்ளார்.
மதன் கார்க்கி
மதன் கார்க்கிweb
Published on

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம்தான் “கங்குவா”. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில், மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கங்குவா
கங்குவா

3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் கங்குவா படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உட்பட மொத்தம் 10 மொழிகளில் உருவாகியுள்ளது. இது 38 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.

மதன் கார்க்கி
காசு கொடுத்தா 10 மில்லியன் வியூஸ்! திட்டமிட்டு புரொமோட் பண்றாங்க! உடைத்து பேசிய யுவன்.. வைரல் வீடியோ

படத்தின் கதைக்களம் என்ன?

படத்தின் கதையை பொறுத்தவரையில், 14 ஆம் நூற்றாண்டை மையமாக கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் 20 சதவீதம் வரலாற்றையும் 80 சதவீதம் கற்பனையும் அடிப்படையாக கொண்டு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பண்டைய காலகட்ட நடைமுறைகளான இறைவழிபாடுகள், கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கங்குவா என்பதற்கு நெருப்பில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம்.

கங்குவா
கங்குவா

10 மொழிகளில் படம் உருவாகும் நிலையில் அதன் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டப்பிங்கின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மதன் கார்க்கி
"1000 கோடி எல்லாம் குறைவு; 2000 கோடி வசூலை எதிர்பார்க்குறேன்" - கங்குவா வசூல் குறித்து தயாரிப்பாளர்!

100 முறைக்குமேல் பார்த்தாலும் தாக்கம் குறையவில்லை..

படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தின் மேல் தயாரிப்பாளர் மற்றும் படக்குழு என அனைவருமே அதிகப்படியான நம்பிக்கையுடன் இருக்கின்றனர். எந்தளவு நம்பிக்கை இருக்கிறது என்றால் “நான் 2000 கோடி வசூலை எதிர்பார்க்கிறேன்” என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறுமளவிற்கு படத்தின் மீது நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கங்குவா படத்தின் உருவாக்கம் குறித்து பதிவிட்டிருக்கும் மதன் கார்க்கி, “கங்குவா திரைப்படத்தின் முழுபதிப்பை இன்று பார்த்தேன். டப்பிங் பணிகளின்போது ஒவ்வொரு காட்சியையும் 100 முறைக்கும் மேல் பார்த்திருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதன் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பிரம்மாண்டமான காட்சிகள், கதையின் ஆழம், அற்புதமான இசை ஆகியவையுடன் இணைந்து சூர்யாவின் நடிப்பு ஒரு அழகிய கலையை உருவாக்கியுள்ளது. இந்த அனுபவத்தைக் கொடுத்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி” என்று பதிவிட்டு படத்தை பாராட்டியுள்ளார்.

மதன் கார்க்கி
“கங்குவா கதை இப்படித்தான் இருக்கும்” - எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா? ஞானவேல்ராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com