Arkasha Stevenson இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The First Omen’. சீக்குவல் எடுத்து எடுத்து சலித்துப் போன ஹாலிவுட் இம்முறை ப்ரீக்குவல் பேய்ப்படம் எடுத்திருக்கிறது. 1976ல் வெளியான The Omen படத்திற்கு ப்ரீக்குவலாக உருவாகியிருக்கிறது படம். நாளை வெளியாகும் இந்தப் படம் விமர்சக ரீதியாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யங்களுக்குப் பின்னால் வேறு யார் பேய் தான் இருக்கிறது. அதனை எப்படி ஒரு குழு முறியடிக்கிறது என்பதே இந்தப் படத்தின் ஒன்லைன்.
காமெடி ஹாரர் காம்பினேசனில் சுந்தர் சி இந்த மாத இறுதியில் வெளியிடவிருக்கும் திரைப்படம் அரண்மனை 4. படம் ஹிட்டானால் அடுத்த பாகம் வருமாம். ஆகவெ ரசிகர்கள் மனது வைத்து...
'ஒரு படக்குழு ஒரு பேய் இடத்தில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும்?' என்ற கேள்வியைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா.? அதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன். அட, வெங்கட் பிரபு இயக்கிய LIVE சீரிஸின் ஒன்லைனும் இதுதானே. கீதாஞ்சலி மல்லி வச்சிந்தி ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கேரளாவில் கர்ப்பிணிப் பெண்களின் சந்தேகத்திற்கிடமான மரணங்களை விசாரிக்கும் திறமையான இன்ஸ்பெக்டர் பற்றிய படம் இது. 80களில் ஹங்கேரி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் இதேபோன்ற வழக்குகளை சந்தேகிக்கும் அச்சமற்ற போலீஸ்காரர் ஒரு மர்மமான அமானுஷ்ய சக்தியைப் பெறுகிறார். ஏப்ரல் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது எல்