’முதல்வன்’ பட பாணியில் நடிகர் அர்ஜூன் கேட்ட கேள்வி! விஜய் சொன்ன ’நச்’ பதில்.. ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

”விஜய்யின் அன்புத் தம்பிகள்தான் ரோல்மாடலாக நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டும்” என நடிகர் மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டுள்ளார்.
’லியோ’ வெற்றி விழா
’லியோ’ வெற்றி விழாட்விட்டர்
Published on

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி கடந்த அக்.19 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லியோ'. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு துவங்கியது. இவ்விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில், மதியம் முதலே அந்தப் பகுதியை ரசிகர்கள் வட்டமிட தொடங்கினர். மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியபோது பிரபலங்கள் ஒவ்வொருவராக நிகழ்ச்சிக்கு வரத்தொடங்கினர். சுமார் 7 மணியளவில் நடிகர் விஜய் அரங்கிற்கு வந்தார். அவர், மேடையேறியதும் விசில் சத்தம் விண்ணைப் பிளந்தது.

இதையும் படிக்க: அவ்ளோ வெகுளியா நீங்க! பேட்டரிடமே ரிவ்யூ கேட்ட முகமது ரிஸ்வான்.. கலாய்க்கும் ரசிகர்கள்! வைரல் வீடியோ!

கனடாவில் இருந்து ஒரு ரசிகர் என்னை மிரட்டினார் - மன்சூர் அலி கான்

இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், " 'நெஞ்சில் குடியிருக்கும் தளபதி ரசிகர்களுக்கு நான் சொல்லும் ரெஸ்பெக்ட் என்னவென்று தெரியுமா' எனப் பாட்டு பாடி பேச்சைத் தொடங்கினார். ‘லியோவின் பிளாஸ்பேக் பொய் என்று நீங்கள் எப்படி கூறலாம்’ என கனடாவில் இருந்து ஒரு ரசிகர் என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார்? ஏவிஎம் ஸ்டுடியோவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ’சக்சஸ்’ என்று பேசி நடித்த இடத்தில்தான், விஜய் நடித்த ’நாளைய தீர்ப்பு’ படம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தின் நாளைய தீர்ப்பு விஜய்தான். விஜய்தான் நாளைய தீர்ப்பு. தமிழகம் உங்களை நம்பித்தான் இருக்கிறது. அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். நடிகர் விஜய்யின் இளைஞர் பட்டாளங்களே நாளைய தீர்ப்பு எழுத தயாராகுங்கள். புகைப்பதையும் குடிப்பதையும் தயவுசெய்து விட்டுவிடுங்கள். விஜய்யின் அன்புத் தம்பிகள்தான் ரோல்மாடலாக நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டும்” என்றார்.

இதையும் படிக்க: தென்னாப்ரிக்க வரலாற்றில் முதல் வீரர்.. புதிய சாதனை படைத்த டி காக்.. அடுத்த டார்கெட் ரோகித், சச்சின்!

விழாவில் இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவமேனன், “தளபதி விஜய் I’m waiting” என்றார்.

இயக்குநர் ரத்தனகுமார், ”எவ்ளோ மேல பறந்தாலும் பசிச்சா கீழ வந்துதான ஆகணும்” எனப் பேசினார்.

விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வந்துவிடுவார் - அர்ஜூன்

இயக்குநரும் நடிகருமான அர்ஜுன், “விஜய்யாக இருப்பது கஷ்டமா.. ஈஸியா” எனக் கேட்க, அதற்கு விஜய் எழுந்து, ”வெளியே இருந்து பார்ப்பதற்கு வேண்டும் என்றால் கடினமாக இருக்கலாம்; ஆனால் உண்மையில் அது ஈஸியாக மட்டுமே உள்ளது. அதற்கு காரணம் ரசிகர்கள்தான்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அர்ஜுன், “நடிகர் விஜய் சீக்கிரம் அரசியலுக்கு வந்துவிடுவார்; மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது” என்றார்.

இதையும் படிக்க: அந்தப் போட்டி! ஆஸ்திரேலியாவின் எண்ணத்தை சுக்குநூறாக உடைத்து வி.வி.எஸ்.லட்சுமண் செய்த தரமான சம்பவம்!

முன்னதாக இயக்குநர் மிஷ்கின், ”திரையுலகில் லெஜன்ட் மைக்கேல் ஜாக்சன், புருஸ் லீதான். ஆனால், நான் நேரில் பார்த்த லெஜன்ட் நடிகர் விஜய்தான். ’லியோ’ படம் குறித்து நான் ஒருமுறை பேசும்போது விஜய்யை ஒருமையில் பேசி இருந்தேன். அதனை கண்டித்து, நான் இறந்ததுபோல் ஒரு போஸ்டர் ஒட்டி இருந்தனர்.

அந்த போஸ்டரை அடித்தது விஜய் ரசிகராக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் விஜய்யோடு இருப்பவர் வாழ்வார்களே தவிர, வீழமாட்டார்கள். அந்த போஸ்டர் ஒட்டியவர் 100 ஆண்டுக்காலம் வாழவேண்டும். நடிகர் விஜய்க்காக எனது நெஞ்சைக்கூட அறுத்துக் கொடுப்பேன்” எனப் பேசியிருந்தார்.

இதையும் படிக்க: ’வீட்டில் வேலை பார்த்தது போதும்.. இனி ஆபீஸ் வாங்க’ - ஊழியர்களுக்கு புதிய உத்தரவிட்ட இன்ஃபோசிஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com