2025 ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில், இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது `Laapataa Ladies'. கிரண் ராவ் இயக்கிய இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்தியா சார்பில் ஆஸ்கர் செல்கிறது. இவை தவிர Film Fedaration of Indiaவின் பரிந்துரைப்பட்டியலில் இருந்த படங்கள் என்னனென்ன தெரியுமா?
ஒடியா மொழி திரைப்படமான `Aabha', மராத்தியில் `Gharat Ganpati', `Swaragandharva Sudhir Phadke', `Ghaath' என மூன்று படங்களும் இடம்பெற்றன.
இந்தியில் `Laapataa Ladies' படத்துடன், ராஜீவ் இயக்கிய `Chhota Bheem and the Curse of Damyaan', பிரகார் ஸ்ரீவத்சவா இயக்கிய `Goodluck', நிகில் நாகேஷ் பட் இயக்கிய `Kill", சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த `Animal', துஷார் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஜோதிகா நடித்த `Srikanth’, கபீர் கான் இயக்கிய `Chandu Champion’, தேவசிஷ் மகிஜா இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்த `Joram', அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்த `Maidaan', மேக்னா குல்ஸார் இயக்கத்தில் விக்கி கௌஷல் நடித்த `Sam Bahadur', ரந்தீப் ஹூடா இயக்கி நடித்த `Swatantrya Veer Savarkar', ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கௌதம், பிரியாமணி நடித்த `Artical 370’ ஆகிய 12 படங்களும் இடம்பெற்றன.
மலையாளத்தில் ஆனந்த் ஏகார்ஷி இயக்கிய `Aattam', கிறிஸ்டோ தோமி இயக்கத்தில் பார்வதி, ஊர்வசி நடித்த `Ullozhukku', ப்ளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த `Aadujeevitham', பாயல் கபாடியா இயக்கிய `All We Imagine as Light' ஆகிய நான்கு படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றது.
தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்கிய `Hanu-Man', நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் நடித்த `Kalki 2898 AD', அஜய் பூபதி இயக்கத்தில் பாயல் ராஜ்புத் நடித்த `Mangalavaaram' ஆகிய மூன்று படங்கள் இடம்பெற்றன.
தமிழில் இருந்து பி எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, ஆன்னா பென் நடித்த `கொட்டுக்காளி’, நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `மகாராஜா’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடித்த `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, பா இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த `தங்கலான்’, பரி இளவழகன் இயக்கிய `ஜமா’, மாரி செல்வராஜ் இயக்கிய `வாழை’ ஆகிய படங்கள் இடம்பெற்றன.
29 படங்கள் அடங்கிய பட்டியலில் இருந்து, இறுதிப்பட்டியலுக்கு ஐந்து படங்கள் சென்றன. அந்த இறுதி பரிந்துரைப்பட்டியலில் `Laapataa Ladies', பா இரஞ்சித்தின் `தங்கலான்’, மாரி செல்வராஜின் `வாழை’, கிறிஸ்டோ தோமியின் `Ullozhukku', துஷாரின் `Srikanth’ ஆகிய படங்கள் இருந்தன. இவற்றியிலிருந்து `Laapataa Ladies' தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் சார்பாக, சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன் இந்தப் பிரிவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படங்களில் Last Film Show (2022) ஆஸ்கர் இறுதிப்பட்டியலிலும் (shortlist), `Mother India’ (1957), `Salaam Bombay!’(1988), `Lagaan’ (2001) போன்ற படங்கள் ஆஸ்கர் நாமினேஷன் வரையும் சென்றன. இம்முறையாவது இந்த விருது கிட்டுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.