தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.
’வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடைசியாக, கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.
மூன்று ஆண்டுகள் கழித்து தனது மூன்றாவது படம் குறித்து அதிகாரபூர்வமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி வெளியிட்டிருந்தார் கிருத்திகா. இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், இன்று கிருத்திகா உதயநிதி தனது 40 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி காளிதாஸ் ஜெயராம், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் வாகி வருகின்றன.