சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகை ஸ்ரீதேவி -போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஜான்வி கபூர், ’தடக்’ என்ற இந்திப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இது மராட்டியில் வெளியான ’சாய்ராட்’ படத்தின் ரீமேக். மகளின் நடிப்பை பார்க்கும் முன் பே இறந்துவிட்டார் ஸ்ரீதேவி.
இந்நிலையில் இரண்டாவது மகள் குஷி கபூர், சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை அவர் இன்ஸ் டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங் களில் அவர் கிளாமராக இருக்கிறார். இதையடுத்து இவரும் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
17 வயது குஷி, விரைவில் பள்ளிப்படிப்பை முடிக்க இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை விட, சர்வதேச மாடல் ஆக வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. இதுபற்றி ஒரு பேட்டியில் ஸ்ரீதேவி கூறும்போது, ’குஷி, முதலில் டாக்டராக வேண்டும் என்று நினைத்தார். பிறகு வழக்கறிஞராக வேண்டும் என்று நினைத்தார். இப்போது சர்வதேச மாடலிங் ஆக முடிவு செய்திருக்கிறார்’ என்று கூறியிருந்தார். இதனால் மாடலிங் துறைக்குச் செல்ல, இப்போதே கிளாமர் புகைப்படங்களை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குஷியின் புகைப்படங்கள் கீழே: