நடிகை குஷ்புக்கு அறுவை சிகிச்சை

நடிகை குஷ்புக்கு அறுவை சிகிச்சை

நடிகை குஷ்புக்கு அறுவை சிகிச்சை
Published on

நடிகை குஷ்பு தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பட்டினப்பாக்கத்திலுள்ள வீட்டில் வழுக்கி விழுந்துள்ளார். அதனால் அவரது முழங்காலில் அடிப்பட்டுள்ளது. மேலும் அவரது கால் ஜவ்வு பகுதி சேதமாகி உள்ளது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த குஷ்புவுக்கு இந்த வாரம் மருத்துவர்கள் அறுவை சிக்கிச்சை மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து குஷ்பு, “இரண்டு முக்கியமான விஷயங்கள். ஒன்று, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இரண்டு, எனக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளது. மேலும் மருத்துவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க சொல்லியிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com