கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ’கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் ரூ.1.50 கோடி நிதியுதவி

கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ’கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் ரூ.1.50 கோடி நிதியுதவி
கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ’கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் ரூ.1.50 கோடி நிதியுதவி
Published on

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கன்னட திரைப்பட தொழிலாளர்கள் 3000 பேரின் தனித்தனி அக்கவுண்ட்டிற்கும் 5 ஆயிரம் என ரூ.1.50 கோடி  நிதியுதவி அளித்திருக்கிறார் ’கேஜிஎஃப்’ நடிகர் யாஷ்.

கொரோனாவின் இரண்டாவது அலை அதிகமுள்ள மகாராஷ்டிரா,உத்தரபிரதேசம், குஜராத்,டெல்லி, கேரளா, கர்நாடகா, தமிழகம் என பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளன. தியேட்டர்களில் மக்கள் கூட்டம் கூடினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று இம்மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், படப்பிடிப்புகள் இன்றி சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக,  ’கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோதான் என்பதை நிரூபிக்கும் விதமாக கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி நிதியுதவி அளித்திருக்கிறார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளவர், “கொரோனா நம் கண்ணுக்குத் தெரியாத எதிரி என்பதை நிரூபித்துள்ளது.நம் நாடு முழுவதும் எண்ணற்றவர்களின் வாழ்வாதரத்தை கொரோனா முடக்கிவிட்டது. எங்கள் சொந்த கன்னட திரைப்பட சகோதரர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், கன்னட திரைப்படத்துறையில் பணிபுரியும் 21 துறைகளைச் சேர்ந்த 3000 தொழிளாளர்களின் தனிப்பட்ட கணக்கிற்கு ரூ 5000 செலுத்தப்படும். இந்தத்தொகை நாம் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்படும் இழப்பு. ஆனால் அவர்களின் வலிகளுக்கு தீர்வாகாது” என்று  தெரிவித்துள்ளார். யாஷ் நடிப்பில் ‘கேஜிஎஃப் 2’ விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. யாஷின் இந்த உதவிக்கு கன்னட திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கோவிந்தா உருக்கமுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்,

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com