நடிகை ஜெயசூர்யா, நடிகை நிமிஷா ஆகியோருக்கு கேரள அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த மலையாள திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகளை, கலாசார அமைச்சர் ஏ.கே.பாலன் திருவனந்தபுரத்தில் நேற்று அறிவித்தார். இதில், சிறந்த நடிகர் விருது, ’கேப்டன்’ மற்றும் ’ஞான் மேரிகுட்டி’ படங்களில் சிறப்பாக நடித்ததற்காக ஜெயசூர்யாவுக்கும், ’சூடானி ஃபிரம் நைஜீரியா’ படத்தில் நடித்த சவுபின் ஜாகீருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(நிமிஷா சஜையன்)
சிறந்த நடிகை விருது, ’சோலை’ மற்றும் ’ஒரு குப்புற சித்த பையன்’ படங்களில் நடித்த நிமிஷா சஜையனுக்கு வழங்கப்படுகிறது. குணசித்திர நடிகைகளாக ’சூடானி ஃபிரம் நைஜீரியா; படத்தில் நடித்த சாவித்ரி ஸ்ரீதரன் மற்றும் சரசாவுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த படமாக, ஷரீன் ஈஷா இயக்கிய ’காந்தன் த லவர் ஆப் கலர்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனராக ஷயாமா பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை நடிகர் விருது ’சோலா’ படத்தில் சிறப்பாக நடித்த ஜோஜூ ஜார்ஜுக்கு வழங்கப்படுகிறது.
(ஷ்யாமா பிரசாத்)
சிறந்த அறிமுக இயக்குனராக ஜக்காரியா (சுடானி ஃபிரம் நைஜீரியா), பின்னணி பாடகராக விஜய் ஜேசுதாஸ், பாடகியாக ஸ்ரேயா கோஷல், இசை அமைப்பாளராக விஷால் பரத்வாஜ் தேவு செய்யப்பட்டுள்ளனர்.