நடிகை கீர்த்தி சுரேஷ் தனியாக ஒரு வெப்சைட் தொடங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். விஜய், சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்கள் உடன் நடிக்க தொடங்கிய பிறகு இப்போது பிசியான நடிகையாகி இருக்கிறார். பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகியுள்ள ‘நடிகையர் திகலம்’படத்தில் சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கீர்த்தியின் தாயார் ஒரு முன்னாள் நடிகை. அதாவது நடிகை மேனகாவின் மகள். இப்போது விக்ரமின் "சாமி-2" படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தன்னைப் பற்றிய செய்திகளை ரசிகர்கள் அறிந்துக் கொள்வதற்காக தனியாக ஒரு வெப்சைட் தொடங்கி இருக்கிறார். அதற்கு https://www.keerthysuresh4us.com என பெயரிட்டிருக்கிறார். அதன் தனது சினிமா நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பர்சனல் போட்டோஸ் என தனித்தனியாக வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார். மேலும் பாடல் காட்சிகள், பேட்டிகள் என அனைத்தும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. பல நடிகர்கள் தங்களுக்கு என தனியாக வெப்சைட் ஆரம்பித்து அதனை நிர்வகிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். அவர்கள் எல்லோரும் ட்விட்டரில் மும்முரமாகி உள்ளனர். ட்விட்டர் வருகைக்குப் பின் தனி வெப்சைட் கலாச்சாரம் காலவதியாகிவிட்டது. காலம் கடந்து பழைய பாணியை கையில் எடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.