கீர்த்தி சுரேஷ் ‘விஜய்62’ படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘விஜய்62’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. பலரும் கீர்த்தியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இதில் இவர் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் நிஜ வேடத்தில் நடித்திருந்தார். நடிகை ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்தப் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அச்சு அசலாக நடித்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதனையொட்டி அவர் அப்படத்தின் புரமோஷன் வேலைகளில் மும்முரமாக இருந்தார். அதற்கான வேலைகள் தற்சமயம் முடிந்ததை அடுத்து ‘விஜய்62’ படப்பிடிப்பு தளத்திற்கு கீர்த்தி திரும்ப உள்ளதாக தெரிகிறது. அவரும் விஜய்யும் ஆடிப்பாடிய டுயட் காட்சிகளை கேமராமேன் ஸ்ரீதர் படமாக்கியிருக்கிறார். ‘பைரவா’விற்கு பின் மீண்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய் கெமிஸ்ட்ரி நல்ல விதமாக அமைந்துள்ளதாக படக்குழு விருப்பம் தெரிவித்துள்ளது.