‘பீட்சா’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இந்தத் திரைப்படம் 2012 ஆண்டு வெளியானது. சின்னத் திரையில் குறும்படங்கள் மூலம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து அவர் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார். முதல் படத்தின் மூலம் பெரும் புகழை சம்பாதித்த சுப்புராஜ், அதன்பின் குறுகிய காலத்திற்குள் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறினார். அதன் பின் ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ என சில படங்களை இயக்கினார்.