‘சுல்தான்’ வெளியீட்டு தேதியில் எந்த மாற்றமும் இல்லை’ - தயாரிப்பாளர் விளக்கம்!

‘சுல்தான்’ வெளியீட்டு தேதியில் எந்த மாற்றமும் இல்லை’ - தயாரிப்பாளர் விளக்கம்!
‘சுல்தான்’ வெளியீட்டு தேதியில் எந்த மாற்றமும் இல்லை’ - தயாரிப்பாளர் விளக்கம்!
Published on

கார்த்தியின் ‘சுல்தான்’ வெளியீட்டு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார், அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு.

கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், பாக்கியராஜ் கண்ணன். இவரது அடுத்தப் படமான சுல்தானில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்கள். ராஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ்படம் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

’தீரன் அதிகாரம் ஒன்று’, ’ஜோக்கர்’, ’அருவி’, ’கைதி’ உள்ளிட்டப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸின் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளியான நிலையில், வரும் 24 ஆம் தேதி ட்ரைலர் வெளியாகவிருக்கிறது. படத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவி வரும் சூழலில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். கொரோனா சூழலால் ’சுல்தான்’ படத்தை ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியிடுகிறோமா என்று எங்கள் நண்பர்கள் கேட்கிறார்கள். இதுவரை அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, மாஸ்க் அணிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து திரையில் அனுபவிக்க காத்திருங்கள்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com