ஹேமா கமிட்டி அறிக்கை எதிரொலி | கன்னட திரைத்துறை சார்ந்த புகார்களை விசாரிக்க குழு அமைக்க கோரிக்கை!

கேரளா திரையுலகை ஹேமா கமிட்டி அறிக்கை கலங்கடித்து வரும் நிலையில், இதுபோன்ற கமிட்டியை அமைக்க வேண்டுமென, பல்வேறு திரைப்படத்துறைகளிலும் குரல்கள் எழுந்திருக்கின்றன.
முதல்வர் சித்தராமையாவை சந்தித்த கன்னட குழு
முதல்வர் சித்தராமையாவை சந்தித்த கன்னட குழுஎக்ஸ் தளம்
Published on

மலையாள திரையுலகில் பாலியல் தொல்லைகள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து புகாரளிக்க தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் மற்ற திரைப்பட துறைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

ME TOO காலக்கட்டத்தில் கன்னட திரைத்துறையில் உருவான "பயர்" (FIRE) அமைப்பு, திரைத்துறை சார்ந்த பாலியல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவை வலியுறுத்தி அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், கன்னட திரையுலகை சேர்ந்த 153 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கையெழுத்தியுட்டுள்ளனர்.

முதல்வர் சித்தராமையாவை சந்தித்த கன்னட குழு
பாலியல் துன்புறுத்தல்|“முயலுக்கு மூன்று கால் என சினிமா துறையை மட்டும் பிடித்துக்கொள்வது ஏன்?”-குஷ்பு

கன்னட இயக்குநர் கவிதா லங்கேஷ் தலைமையில் இயங்கி வரும் அந்த குழுவில், நடிகைகள் ரம்யா, வினய் ராஜ்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் தெலுங்கு திரைத்துறையிலும், ஹேமா கமிட்டி இதுபோன்ற குழுவை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. VOICE OF WOMEN IN TFI என்ற அமைப்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை நடிகை சமந்தா, தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தா பகிர்ந்தவை
சமந்தா பகிர்ந்தவை
முதல்வர் சித்தராமையாவை சந்தித்த கன்னட குழு
பசுக் காலவர்களால் கொல்லப்பட்ட புலம்பெயர் தொழிலாளி - மனைவிக்கு அரசு வேலை வழங்கிய மேற்கு வங்க அரசு!

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க சினிமா துறையில், பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, "சுரக்ஷா பந்து" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு இந்தியாவின் திரைக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு, மேற்கு வங்க திரைத்துறையினர் மற்ற அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஹேமா கமிட்டி
ஹேமா கமிட்டி

மலையாள திரைத்துறையில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகள், இந்தியா முழுவதும் உள்ள திரைத்துறைகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. திரைத்துறையில் பெண்கள் பாதுகாப்பாக பணியாற்றும் சூழல் உருவாவதே, இந்த விவகாரத்திற்கு சிறந்த முடிவுரையாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com